கடந்த 2004ம் ஆண்டில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் பசுபதி அபிராமி நெப்போலியன் உள்ளிட்டோர் நடித்த படத்துக்கு சண்டியர் என டைட்டில் வைத்த நிலையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பிறகு விருமாண்டி என்று டைட்டில் மாற்றி அந்த படம் வெளியானது. ஆனால் அதன்பிறகு 2014ம் ஆண்டில் ஆகஸ்ட் 1ம் தேதி சோழதேவன் இயக்கத்தில் சண்டியர் என்ற படம் வெளியாகி உள்ளது. ஜெகன் கயல் நாயகம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதன்பிறகு என்கே விஸ்வநாத் இயக்கத்தில் பிரேம் மேனன் குஷ்பு இணைந்து நடித்த வர்றார் சண்டியர் என்ற படமும் 1995ல் வெளியாகி உள்ளது. தமிழில் ஏற்கனவே சண்டியர் என்ற தலைப்பில் 2 படங்கள் வெளியான நிலையில் அப்போது எதிர்ப்பு அரசியல் செய்யாத கிருஷ்ணசாமி, கமல் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு சண்டியர் என டைட்டில் வைத்தால் மட்டும் போராடுவது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.





