- Advertisement -
தமிழ் சினிமாவில் 70 எம்எம் வைடு ஸ்கிரீன் முதல் படம் நடிகர் ரஜினிகாந்த் நடித்த மாவீரன் படம்தான். கடந்த 1986ம் ஆண்டில் மாவீரன் படம் திரைக்கு வந்தது. திரையின் அகலமும் தெளிவும் இரு மடங்கு இருந்தது. அப்போது தியேட்டரில் மாவீரன் படம் பார்த்தவர்களுக்கு அது ஒரு எக்ஸ்பீரியன்ஸாக இருந்திருக்கும். இயக்குனர் ராஜசேகர் படத்தை டைரக்ட் செய்திருந்தார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். மாவீரன் படத்தில் ரஜினியுடன் அம்பிகா நடித்திருந்தனர். மேலும் பாலிவுட் நடிகர் தாராசிங் மல்யுத்த வீரராக நடித்திருந்தார். மைசூர் அரண்மனை பெரிய போர்கள காட்சிகள் என படம் முழுக்க பிரமாண்டமாக எடுக்கப்பட்டது. தொழில்நுட்ப ரீதியாக எல்லோரும் பாராட்டப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





