- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயின் விசில் போடு பாடலுக்கும் வந்தாச்சு வினை... இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தான்ப்பா...

விஜயின் விசில் போடு பாடலுக்கும் வந்தாச்சு வினை… இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தான்ப்பா…

- Advertisement -

விஜய் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இதனை ரசிகர்கள் சுருக்கி கோட் என்று அழைக்கிறார்கள். முந்தைய திரைப்படம் ஆன மாநாட்டில், டைம் லுக் கான்செப்ட் மையப்படுத்தி எடுத்த வெங்கட் பிரபு இந்த படத்தில் டைம் டிராவல்லை கையில் எடுத்திருக்கிறார்.

நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் படத்தில் இரண்டு விஜய் நடிப்பதாகவும் தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், போஸ்டரில் இரண்டு விஜய் இடம்பெற்று இருந்தாலும் டைம் ட்ராவல் கதை என்பதால் அதில் மாற்றம் இருக்கலாம் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் படத்தில் ஏராளமான நட்சத்திரங்களையும் வெங்கட் பிரபு நடிக்க வைத்திருக்கிறார். பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா என பலர் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு, சென்னை துருக்கி தாய்லாந்து திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

தற்போது ரஷ்யாவில் இறுதி கட்ட படப்பிடிப்பில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். சூட்டிங் பணிகள் விரைவில் முடிவடைய இருக்கும் நிலையில், வி எஃப் எக்ஸ் பணிகளுக்காக வெங்கட் பிரபு நிறைய மெனக்கெட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இந்த நிலையில் சமீபத்தில், படத்தின் அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம், செப்டம்பர் 5ஆம் தேதி கோட் திரைப்படம் வெளியாவதாக அறிவித்தது. தமிழ் புத்தாண்டுக்கு விருந்தாக படத்தில் இருந்து விசில் போடு பாடலும் வெளியானது. இந்த பாடலை விஜய் தன் சொந்த குரலில் பாடி இருக்கிறார். எதிர்பார்த்த அளவுக்கு இந்த பாடல் இல்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் சமூக வலைதளத்தில் இந்த பாடல் ட்ரெண்டாகி இருக்கிறது. பாடலில் பிரபுதேவா பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆகியோர் இடம் பெற்றிருப்பதும் கலகலப்பாக அமைந்துள்ளது. பாடல் வெளியாகி ஒரே நாளில் இரண்டு கோடி பார்வையாளர்களை கடந்திருக்கிறது. இந்த நிலையில் விசில் போடு பாடலுக்கு தடை கோரி, சமூக ஆர்வலர் ஒருவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். போதைப் பொருள் மற்றும் மதுபான பாட்டில்கள் காட்சியளிக்கும் வகையில் இந்த பாடல் இடம் பெற்றிருப்பதால் இதனை தடை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள், இதற்கும் இப்போது வில்லங்கம் வந்து விட்டதா என்று கூறி வருகின்றனர்.

சற்று முன்