நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சூர்யாவின் 44-வது படமாக இது உருவாகி வருகிறது. இதில், love laughter war என்று எழுதப்பட்டிருக்கிறது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் தொடங்கியது. தொடர்ந்து கொடைக்கானல் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கார்த்திக் சுப்புராஜின் முந்தைய திரைப்படமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் இந்த திரைப்படத்தின் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். கருணாகரன், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கிறார்கள். கேங்ஸ்டர் பாணியில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. சூர்யாவின் கெட்டப் படத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே அவர் நடித்திருக்கும் கங்குவா திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் இதன் படபிடிப்பு நடத்தப்பட்டது. மிகப்பெரும் பொருட்செலவில் இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து உள்ளது. மொத்தம் பத்து மொழிகளில் கங்குவா திரைப்படம் உருவாகி இருக்கிறது.
இந்தப் படத்தில் வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கிறார். நட்டி, ஜெகபதிபாபு, யோகி பாபு கோவை சரளா உள்ளிட்டோரும் இந்த படத்தில் இடம்பெற்று இருக்கிறார்கள். இதில் சூர்யா இரு வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். பூர்வ ஜென்மம் மற்றும் தற்கால சமயத்தை தொடர்பு படுத்திய இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படம் முதலில் அக்டோபர் பத்தாம் தேதி தான் வெளியாக இருந்தது. ஆனால் அன்றைய தேதியில் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வெளியாக இருப்பதால், அதன் ரிலீஸ் தேதி இருந்து பின்வாங்கியது. இப்படியான சூழலில் தனது 44 வது திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்க சூர்யா திட்டமிட்டுள்ளாராம். குறிப்பாக பொங்கல் தினத்தில் படத்தை வெளியிட அவர் முனைப்பு காட்டி வருவதாகவும், இதில் எந்த ஒரு பின் வாங்கலும் இருக்கக் கூடாது என்று பட குழுவும் முடிவு எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.





