- Advertisement -
Homeபொழுதுபோக்குகங்குவா படத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறதா ரெட் ஜெயின்ட் மூவிஸ்? தியேட்டர் உரிமையாளர்களுக்கு போட்ட திடீர் கண்டிஷன்...

கங்குவா படத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறதா ரெட் ஜெயின்ட் மூவிஸ்? தியேட்டர் உரிமையாளர்களுக்கு போட்ட திடீர் கண்டிஷன் – விரக்தியில் சூர்யா ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசனின் சொந்த பட தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவான படம் அமரன். சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்துள்ள இந்த படம் கடந்த தீபாவளியன்று ரிலீஸானது. கடந்த ஒரு வாரத்தில் இந்த உலகளவில் 180 கோடி ரூபாய், தமிழகத்தில் 87.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை கதைக்கருவாக கொண்டு இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்திருக்கிறார். ரசிகர்களின் அமோக ஆதரவு, வரவேற்புடன் இந்த படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

- Advertisement -

அமரன் படத்தை பார்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் தங்கம் தென்னரசு, நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் அமரன் படத்தை பாராட்டினர். சிவக்குமார், சூர்யா, ஜோதிகா ஆகியோர் அமரன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில் வருகிற 14ம் தேதி ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் நடிகர் சூர்யா நடித்த கங்குவா படம் உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. 10க்கும் மேற்பட்ட மொழிகளில், பான் இந்தியா படமாக இந்த படம் வெளியாகிறது. சிறுத்தை சிவா இயக்கியுள்ள கங்குவா படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

- Advertisement -

இந்த சூழலில், தற்போது உதயநிதியின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயின்ட் நிறுவனம் தரப்பில் தமிழ்நாடு தியேட்டர்களுக்கு ஒரு புதிய உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இது தியேட்டர் உரிமையாளர்களை கதிகலங்க வைத்துள்ளது. மேலும் சூர்யா ரசிகர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அதாவது, கங்குவா படம் வரும் 14ம் தேதி ரிலீஸாகிறது. அந்த படத்துக்காக தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கும் அமரன் படத்தை மாத்த வேண்டாம். ரசிகர்கள் கூட்டம் போதிய அளவில் இருக்கும் பட்சத்தில் அமரன் படமே ஓடட்டும். புதிய படம் கங்குவா ரிலீஸ்க்காக அமரன் படத்தை மாற்ற வேண்டாம் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அமரன் படம் தற்போது ஒரு வாரம் ஓடி விட்டது. இன்னும் ஒரு வாரம் ஓடிய பிறகுதான் கங்குவா ரிலீஸாகிறது. 14 நாட்களுக்கு பிறகும் அமரன் படம் பார்க்க ரசிகர்கள் கூட்டம் வருமா, என்ற குழப்பத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்