- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் அடுத்த ஜென்மத்தில் அந்த குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன்… தஞ்சாவூரில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்தில்...

நான் அடுத்த ஜென்மத்தில் அந்த குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன்… தஞ்சாவூரில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் உருக்கமாக பேசிய நடிகர் விஜய்!

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே இன்று நடந்த தவெக நிர்வாகிகள் மற்றும் பிரச்சார கூட்டத்தில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பேசியதாவது, வேலூர் கூட்டத்தில் தமிழ்நாடு தான் விஜய். விஜய்தான் தமிழ்நாடு என்று நான் சொன்னேன். தமிழக மக்களின் உண்மையான பிரதிநிதி நான் என்பதற்கு தான் அப்படி சொல்லி இருந்தேன்.

அதோடு விஜய் வெர்சஸ் ஸ்டாலின் சார் என்றும் கூறியிருந்தேன். தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு டெல்லியைப் பற்றி ஏன் பேச வேண்டும் என்றும் கேட்டிருந்தேன். உடனே விஜய் பாஜகவுக்காக பேசுகிறார் என நான் பேசியதை திரித்து பேசுகின்றனர். சிறுபான்மை சகோதரர்களை பயமுறுத்த ஏமாற்று வேலை செய்கிறார்கள். அதை இனிமேல் செய்ய முடியாது என தெரிந்து கொண்டு நான் பேசுவதை திரித்து பேசி தில்லுமுற்று வேலை செய்கின்றனர்.

- Advertisement -

சென்னையில் டெல்லி டெல்லி என கூவுகிறார்கள். அடிக்கிற கொள்ளைக்கு ரெய்டு வந்தால் டெல்லிக்கு வெள்ளைக்கொடி பிடிக்கிறார்கள். டெல்லி அணி அந்த அணி இந்த அணி என எல்லா அணியும் இந்த தேர்தலில் நொறுங்கும். தவெக அடித்து நொறுக்கும். கிரிக்கெட்டில் விசில் போடுவது நம்ம சிஎஸ்கே. வரவிருக்கும் தேர்தலில் விசில் போடப் போவது நம்ம தவெக. ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி என்று சின்ன பையன்கள் கூட சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

தமிழகம் தான் தவெக. தவெக தான் தமிழகம். இது தேர்தலுக்கான உறவு இல்லை. இது இயற்கையாக உருவான உறவு. அதை நான் உணர்ந்து இருக்கிறேன். எனக்கும் என்னுடைய மக்களுக்கும் நடுவில் யாராலும் நுழைய முடியாது. அம்மா பையன், அப்பா பையன், அண்ணன் தங்கை, அக்கா தம்பி உறவு. இது ஆழமான உறவு என்பதை தமிழக மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு இது எலக்சன் ஆனால் எனக்கும் என்னை நேசிக்கும் மக்களுக்கும் இது எமோஷன்.

- Advertisement -

தண்ணீர் இல்லாமல் தமிழ்நாடு திவாலாக போகிறது என்று சமீபத்தில் ஒரு கட்டுரை படித்தேன். உண்மையில் மிகவும் வருத்தமாக இருந்தது. காரணம் நிலத்தடி நீரை பாதுகாக்காமல் இருப்பதுதான். மாஃபியாவுக்கு ஆதரவு கொடுப்பது திமுக அரசு. திமுகு ஆட்சியில் தமிழ்நாடு திவாலாக போகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் மூட்டைகள் வீணாகிறது. இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? மாறாக விவசாயிகளை குண்டர் சட்டத்தில் தான் போட தெரியும். தண்ணிக்குள்ளே சென்று அணைகளை ஆராய்வது வரைக்கும் எனக்கு தெரியும். அமைதியாக இருப்பதால் எனக்கு எதுவும் தெரியாது என்று நினைக்காதீர்கள்.

கடவுளுக்கே படையல் போடும் உயர்ந்த மனிதர்கள் தான் விவசாயிகள். மறுபிறவி மறு ஜென்மம் பற்றி எனக்கு தெரியாது. அடுத்த ஜென்மம் என இருந்தால் நான் ஒரு விவசாய குடும்பத்தில் பிறக்க வேண்டும். விவசாயம் பற்றி எனக்கு சரியாக தெரியாது. ஆனால் அவர்கள் படும் கஷ்டம் எனக்கு தெரியும். நானும் டெல்டாக்காரன் என்று காதில் டால்டா ஊற்ற மாட்டேன். டெல்டாகாரன் என சொல்லும் நீங்கள் விவசாயிகளுக்கு துணை நின்றது உண்டா என்று நடிகர் விஜய் அந்த கூட்டத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்