- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர்கள் சூர்யா - சிவகார்த்திகேயன் இடையே நீண்ட நாட்களாக நீடிக்கும் புகைச்சல், இப்படி ஒரு சம்பவமும்...

நடிகர்கள் சூர்யா – சிவகார்த்திகேயன் இடையே நீண்ட நாட்களாக நீடிக்கும் புகைச்சல், இப்படி ஒரு சம்பவமும் நடந்ததா? வெளிச்சத்துக்கு வந்த ரகசியம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களாக உள்ள சூர்யா சிவகார்த்திகேயன் இடையே மறைமுகமான ஒரு கசப்பான உணர்வு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால்தான் இருவரும் பெரும்பாலும் நேரில் சந்தித்துக் கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது. சூர்யாவின் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் மிஸ்டர் லோக்கல் என்ற படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டு சம்பளமும் பேசி அதற்கான அட்வான்ஸ் தொகையும் பெற்றிருக்கிறார். ஆனால் தனது மார்க்கெட் உயர்ந்து விட்டதாக கூறி ஏற்கனவே பேசிய சம்பளத்தை விட அதிக சம்பளம் கேட்டதாகவும் இயக்குனர் ராஜேஷின் திரைக்கதையில் தலையிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் காரணமாக சூர்யா சிவகார்த்தகேயன் இடையே நீண்டகாலமாக கருத்து வேறுபாடும் கசப்பான உணர்வும் இருப்பதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்