- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி படப்பிடிப்பில் அஜீத்குமார் - மகிழ்திருமேனிக்கு இடையே உரசல், படத்தை முடிப்பதில் ஏற்பட்ட திடீர் சிக்கல்...

விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜீத்குமார் – மகிழ்திருமேனிக்கு இடையே உரசல், படத்தை முடிப்பதில் ஏற்பட்ட திடீர் சிக்கல் – அப்செட் ஆன அஜீத்

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில், அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பு, கடந்த 3 மாதங்களாக நடந்து வருகிறது. இந்த படத்தில் அஜீத்குமாருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். பிரியா பவானி சங்கர், ரெஜினா, ஆரவ், அர்ஜூன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது தடைபட்டுள்ளது.

அஜர்பைஜான் குளிர் பிரதேசமாக இருப்பதால், குளிர் மற்றும் கடும்பனி காரணமாக படப்பிடிப்பில் அடிக்கடி தடங்கல் ஏற்பட்டு வருகிறது. மணல் புயலால் இரண்டுமுறை படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. இப்போது படப்பிடிப்புக்குழு சென்னையில் உள்ளது. துபாயில் அஜீத்குமார் அவரது வீட்டில் உள்ளார். வரும் 3ம் தேதி தனது மகளின் பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

- Advertisement -

இந்நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பு வரும் 7ம் தேதி முதல் மீண்டும் அஜர்பைஜானில் நடத்த திட்டமிட்டு இருந்தாலும், இயற்கை சீ்ற்றங்கள் இல்லாத பட்சத்தில் மட்டுமே அது சாத்தியமாகும். மீண்டும் பிரச்னை நீடிககும் பட்சத்தில் ஷூட்டிங் ஸ்பாட் மாறும். லொகேஷன் தேடும் நிலை படக்குழுவுக்கு ஏற்படும்.

இதற்கிடையே படத்தின் ஹீரோ அஜீத்குமாருக்கும், இயக்குநர் மகிழ்திருமேனிக்கும் இடையே ஏற்பட்டுள்ள உரசல், வெளிப்படையாக தெரிய வந்துள்ளது. அதாவது, அஜீத்குமாரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான நீரவ்ஷா தான் முதலில் விடாமுயற்சி படத்தின் ஒளிப்பதிவை செய்து வந்தார்.

- Advertisement -

நீரவ்ஷா, அஜீத்குமாரின் நண்பர் என்பதால், அவரை நீரவ்ஷாவை பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவரை மாற்றிவிட்டு ஓம்பிரகாஷ் என்ற ஒளிப்பதிவாளரை இயக்குநர் மகிழ்திருமேனி நியமித்தார். இயக்குநரின் விருப்பமும், வசதியும் முக்கியம் என்பதால் இதை அஜீத் பெரிதுப்படுத்தவில்லை, எனினும் இது அவருக்கு அதிருப்தியை தந்தது.

வரும் மார்ச் மாதம், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் நடிக்க முடிவு செய்துள்ளார். அதனால் பிப்ரவரி இறுதிக்குள் விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்தாக வேண்டும். ஆனால், இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு மட்டுமே நடந்துள்ளது. இதற்கு இயக்குநரின் மெதுவான நிர்வாகமே காரணமாக உள்ளது. பிப்ரவரிக்கு பிறகு ஒருநாள் கூட கூடுதலாக நடிக்க மாட்டார் என, அஜீத் தரப்பில் இருந்து லைக்கா தயாரிப்பு நிறுவனத்திடம் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், இதுவும் இருவரது உரசலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்