- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் தவெக தலைவராக அந்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவாரா? - குழப்பத்தில் தவிக்கும் கட்சி...

நடிகர் விஜய் தவெக தலைவராக அந்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவாரா? – குழப்பத்தில் தவிக்கும் கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கி ஏறக்குறைய 2 ஆண்டுகள் நிறைவடைய போகிறது. வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதி வந்தால் தவெக கட்சிக்கு 2 ஆண்டு நிறைவடைந்து மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்க உள்ளது. தவெக கட்சிக்கு கொடி உள்ளது. கொள்கை பாடல் உள்ளது.

இந்நிலையில் தவெக கட்சியின் சின்னம் என்ன என்பதில் குழப்பமும் சந்தேகமும் நீடித்து வருகிறது. இதுகுறித்து பல்வேறு தகவல்களும் வதந்திகளும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதிமுக என்றாலே இரட்டை இலை, திமுக என்றாலே உதயசூரியன், காங்கிரஸ் என்றாலே கை, பாமக என்றாலே மாம்பழம், மதிமுக என்றாலே பம்பரம் என ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு சின்னம் அவர்களது அடையாளமாக இருக்கிறது.

அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு இதுதான் சின்னம் என்று தெரிந்து விட்டால் ரசிகர்கள் இன்னும் கொண்டாடுவார்கள். அந்த வகையில் தவெக கட்சி தலைமை சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் சில குறிப்பிட்ட சின்னங்களில் ஒன்றை ஒதுக்கி தருமாறு கோரிக்கை வைத்துள்ளது. அந்த வகையில் ஆட்டோ விசில் உள்ளிட்ட சில சின்னங்களில் ஒன்றை தவெக கட்சிக்கு தேர்வு செய்து தருமாறு கேட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தவெக கட்சிக்கு, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டதாகவும், இன்னும் சிலர் தவெக கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதாகவும் கூறி வருகின்றனர். இணையத்தில் ஆட்டோ மற்றும் விசில் புகைப்படங்களை வெளியிட்டு இதுதான் தவெக சின்னம் என்று தகவல்களை பரப்பி வருகின்றனர்.

இப்போது தவெக கட்சிக்கு தேர்தல் ஆணையம் மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. ஆனால் தவெக தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வமான தங்கள் கட்சியின் சின்னம் இதுதான் என்று அறிவிக்கப்படவில்லை. தொடர்ந்து கட்சி சின்னம் குறித்த குழப்பங்களும் சந்தேகங்களும் மக்களுக்கு நீடித்து வருகிறது.

அதனால் மிக விரைவில் தவெக கட்சியின் தலைவர் விஜய் தேர்தல் ஆணையம் அளித்த கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட சின்னம் இதுதான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஏனெனில் தேர்தல் நெருங்க நெருங்க கட்சியின் சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது முக்கியம் என்பதால் தவெக சின்னம் குறித்து அறிய மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

சற்று முன்