- Advertisement -
Homeபொழுதுபோக்குகமல் நடிக்கிற தக் லைப் படத்துல நயன்தாரா இருக்காங்களா, இல்லையா - குந்தவைக்கு முதலிடம் தந்த...

கமல் நடிக்கிற தக் லைப் படத்துல நயன்தாரா இருக்காங்களா, இல்லையா – குந்தவைக்கு முதலிடம் தந்த மணிரத்னம் மவுனம் கலைப்பாரா…

- Advertisement -

தமிழ் சினிமாவில், உலகநாயகன் கமல்ஹாசன் எப்போதும் நாயகிகளின் மனம் கவர்ந்த நாயகனாகவே இருக்கிறார். அவருடன் நடிப்பது என்றாலே, நடிகைகளுக்கு உள்ளூர சந்தோஷம்தான். ஏனெனில் உலகளாவிய ரசிகர்களை கொண்ட அவரது படத்தில் நடித்தால், விரைவில் பிரபலமாகி விடலாம்.

அதுமட்டுமின்றி கமல் படத்தில் நடிக்கும்போது நடிப்பு ரீதியான பல விஷயங்களை அவரிடம் இருந்துக் கற்றுக்கொள்ள முடியும். ஒரு சிறந்த திரைக் கலைஞனாக, மற்றவர்களுக்கு நிறைய கற்றுத் தருபவர் கமல்ஹாசன். அதனால், நடிகைகளாக வருபவர்கள் அவரிடம் இருந்த நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

- Advertisement -

நாயகன் படத்துக்கு பிறகு, இயக்குநர் மணிரத்னம் இயக்கும் தக் லைப் படத்தில், கமல்ஹாசன் நடிக்கிறார். எச். வினோத் இயக்கும் படத்தை அடுத்து, அவர் 2024ம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் நடிக்கிறார். அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இந்த படம் திரைக்கு வர வாய்ப்பு உள்ளது.

மணிரத்னம் – கமல்ஹாசன் இணையும் படத்தில் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நயன்தாரா. கமலுக்கு முதன்முறையாக இந்த படத்தில் நயன்தாரா ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்பது பரபரப்பாக பேசப்பட்டது. இவருக்கு பெரிய சம்பளம் அதாவது ரூ. 12 கோடி ரூபாய் பேசப்பட்டு, ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் தகவல் பரவியது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இந்த படத்தில் திரிஷா நடிப்பதும் உறுதியாகி உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் ஆய்த எழுத்து, பொன்னியின் செல்வன் படங்களில் ஏற்கனவே நடித்துள்ள திரிஷா, அந்த நட்பின் அடிப்படையில் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மன்மதன் அம்பு படத்தில், ஏற்கனவே கமலுடன் திரிஷா நடித்திருக்கிறார். அந்த வகையில், கமலுடனும் நல்ல நட்பில் இருக்கிறார் திரிஷா.

இப்போது, இந்த படத்தில் 3வது நாயகியாக விருமாண்டி படத்தில் நடித்த அபிராமியும் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், தக் லைப் படத்தில் நயன்தாரா நடிப்பதற்கான எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வரவில்லை. அந்த வீடியோ காட்சிகளிலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான் நடிப்பது மட்டும் உறுதியாகி விட்டது. திரிஷா தக் லைப் படத்தில் நடிப்பதால், நயன்தாரா ஒதுங்கி விட்டதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்