நடிகர் சிலம்பரசன் இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஆண்ட்ரியா யோகேஸ்வரி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு கோவில்பட்டியில் கடந்த மாதம் 10 நாட்கள் வரை நடந்து முடிந்து விட்டது.
அடுத்ததாக 2ம் கட்ட படப்பிடிப்பும் கோவில்பட்டியில் நடக்க உள்ளது. இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். நடிகர் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்குவதாக இருந்த வாடிவாசல் படம் தள்ளிப் போனதால் அதற்கு பதிலாக சிம்பு நடிக்கும் படத்தை தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அரசன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்க சில மாதங்களுக்கு முன்பே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் அவர் கமிட் ஆனாரா இல்லையா என்பது முடிவாகவில்லை. இந்த சூழலில் படப்பிடிப்பு முதல் ஷெட்யூல் முடிவடைந்த நிலையில் அரசன் படத்தின் கதாநாயகி யார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
சமீபத்தில்தான் நடிகை சமந்தா வெப் சீரிஸ் இயக்குனர் ராஜ்நெடிமூர் என்பவரை 2வது திருமணம் செய்துக்கொண்டார். இப்போது அவர் போர்ச்சுக்கல் நாட்டில் தனது கணவருடன் ஹனிமூன் சென்றிருக்கிறார். கிறிஸ்துமஸ் புத்தாண்டை வெளிநாட்டில் கணவருடன் கொண்டாடிய சமந்தா பொங்கலுக்கு திரும்பி விடுவாரா என்பது உறுதியாகவில்லை.
இந்த சூழலில் நடிகை சமந்தா அரசன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஓகே சொல்வாரா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது. ஏனெனில் வெற்றிமாறன் படம் என்றால் பல மாதங்களுக்கு இழுத்தடிக்க வாய்ப்புள்ளது. அதுவும் புதிதாக திருமணமான நிலையில் படப்பிடிப்பில் சமந்தா ஆர்வமாக கலந்துக்கொள்வாரா என்பதிலும் குழப்பம் உள்ளது.
இப்போது கதாநாயகி இல்லாமலேயே அரசன் படத்தின் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கதாநாயகி கட்டாயம் இடம்பெற வேண்டிய காட்சிகளை படமாக்கும் போது சமந்தா அதில் நிச்சயம் கலந்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை அவர் வராத பட்சத்தில் வேறு நாயகியை கமிட் செய்யலாமா என்ற கோணத்திலும் படக்குழு வேறு நாயகிகள் சிலரை தேடி வருவதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





