விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. அதனால் கேபிஒய் (கலக்கப்போவது யாரு) பாலா என்றே மக்கள் மத்தியில் அவர் பரிச்சயமாகி விட்டார். காமெடியாக பன்ச் டயலாக் பேசுவது கேபிஒய் பாலாவின் ஸ்பெஷாலிட்டி. பேசிப் பேசியே மற்றவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து விடுவார்.
கலக்கப் போவது நிகழ்ச்சியை தொடர்ந்த குக் வித் கோமாளி சீசன் 2ல் பாலா கலந்துக்கொண்டார். அப்போது அவர் செய்த சேட்டைகளும், காமெடிகளும் இன்னும் மக்கள் மத்தியில் அவரை கொண்டு சேர்த்தது. சினிமாவிலும் சின்ன சின்ன ரோல்களில் நடிக்க துவங்கியிருக்கிறார். மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்.
வாழ்க்கையில் கஷ்டப்படும் மக்களுக்கு உதவுவதில் அதிக ஆர்வமும் விருப்பமும் கொண்டவர் கேபிஒய் பாலா. ஈரோடு, சத்தியமங்கம் அத்தாணி பகுதிகளை சேர்ந்த மலைவாழ் கிராமப்புற மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்களை இலவசமாக வாங்கி தந்திருக்கிறார். உடல் ஊனமுற்ற பட்டதாரி வாலிபருக்கு 3 சக்கர ஸ்கூட்டி, பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பைக், வறுமையில் தவித்த பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளார்.
அத்துடன், கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் பெய்த கனமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தன்னிடம் இருந்த பணம் 5 லட்சம் ரூபாயை, பகிர்ந்து கொடுத்து உதவினார் பாலா. மேலும் விரைவில் இலவச மருத்துவமனை கட்டி, அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவச மருத்துவம் கிடைக்கச் செய்வேன் என்றும் கூறி வருகிறார்.
இந்நிலையில் கேபிஒய் பாலாவுக்கும், அவர் காதலித்து வந்த பெண்ணுக்கும் விரைவில் திருமணம் நடக்க ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்நிலையில், பெண் வீட்டார் திடீரென சில கண்டிசன்களை சொல்லி திருமணத்தை நிறுத்திவிட்டனர். இதனால் பாலா, தன் காதலியை பிரிந்த சோகத்தில் நொந்து போய் இருப்பதாக தகவல்கள் வெளியாக வருகிறது.
கேபிஒய் பாலா தன் வருமானத்தில், 60 சதவீதம் வரை மற்றவர்களுக்கு உதவுவதில் செலவு செய்கிறார். இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் இவரிடம் எதுவுமே மிஞ்சாது. எங்கள் மகள்தான் வறுமையில் கஷ்டப்பட வேண்டும். அதனால் திருமணம் வேண்டாம் என காதலியின் குடும்பத்தினர் இந்த திருமணத்தை நிறுத்தி விட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மத்தவங்களுக்கு உதவியது கூட குற்றமாகி விட்டதே என கேபிஒய் பாலாவின் நிலையை பார்த்து பலரும் பரிதாபப்பட்டு வருகின்றனர்.





