- Advertisement -
Homeபொழுதுபோக்குசித்தார்த் நடித்த மிஸ் யூ படம் எப்படி இருக்கு? அவங்களுக்கு இந்த படம் கண்டிப்பா பிடிக்கும்,...

சித்தார்த் நடித்த மிஸ் யூ படம் எப்படி இருக்கு? அவங்களுக்கு இந்த படம் கண்டிப்பா பிடிக்கும், ஆனா… – உள்குத்து வைத்து விமர்சித்த பிரபலம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் சித்தார்த் ரசிகர்களின் மனம் கவர்ந்தவராக இருக்கிறார். பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நாயகனாக அறிமுகமான சித்தார்த் தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி ஜிகர்தண்டா அருவம் சிவப்பு மஞ்சள் பச்சை சித்தா இந்தியன் 2 என பல படங்களில் நடித்திருக்கிறார்.

இப்போது சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடித்த மிஸ் யூ என்ற படம் ரிலீஸாகி உள்ளது. இந்த படம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பே வெளியாக திட்டமிட்டிருந்த நிலையில், பெங்கால் புயல் காரணமாக ரிலீஸ் ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் புஷ்பா 2 படம் ரிலீஸ் காரணமாகவும் இந்த படம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

- Advertisement -

நேற்று வெளியான மிஸ் யூ படம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் கூறியிருப்பதாவது, நீண்ட நாட்களுக்கு பின் வெளிவந்த லவ் சப்ஜெக்ட் படம், சித்தார்த் நடித்த படம் என்பதால் ரசிகர்கள் பலரும் இந்த படத்தை பார்க்க விரும்பி வருகின்றனர். ஆக்சன் மசாலா படங்களுக்கு மத்தியில் காதல் படமாக ரசிகர்களுக்கு இந்த படம் ஆறுதலாக இருக்கும்.

என்னைப் போல வருஷத்துக்கு பல படங்கள் பார்ப்பவர்களுக்கு இந்த படம் கண்டிப்பாக பிடிக்காது. ஆனால் எப்போதாவது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும். படத்தை கடைசி வரை பொறுமையாக அமர்ந்து பார்க்க வைத்தது படத்தின் மேக்கிங் தான். படத்தில் நடிகர்களும் சிறப்பாகவே நடித்துள்ளனர்.

- Advertisement -

நல்ல கதையை எடுத்துக்கொண்ட படத்தின் இயக்குனர் ராஜசேகர், திரைக்கதையில் அந்த சுவாரசியத்தை கடத்த தவறி விட்டார். அதனால் படம் முழுவதும் ஏதோ சம்திங் மிஸ் ஆனது போலவே படம் செல்கிறது. கண்டிப்பாக இந்த படம் மோசமான படம் கிடையாது. ஆனால் ஓகே என்று சொல்கிற ரகம்தான் என்று ப்ளு சட்டை மாறன் மிஸ் யூ படம் குறித்து விமர்சித்துள்ளார்.

வழக்கமாக தமிழில், தமிழ் டப்பிங்கில் வெளியாகும் படங்களை குப்பை படங்கள் என்று விமர்சிக்கும் ப்ளு சட்டை மாறன், மிஸ் யூ படத்துக்கு பல விஷயங்களை பாசிட்டிவ் ஆக சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புஷ்பா 2 படத்தை பற்றி சொல்லும் போது, புஷ்பா படமே ஏன் ஜெயிச்சதுன்னு தெரியல, இதுல 2ம் பாகத்தை வேற எடுத்து வெச்சிருக்காங்க என்று கலாய்த்தவர் ப்ளு சட்டை மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்