- Advertisement -
இயக்குனர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சிக்மா படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகை பரியா அப்துல்லா நாயகியாக நடித்திருந்தார். சிக்மா படம் பெரிய வரவேற்பை பெற்றால் நிறைய படங்களில் வாய்ப்பு கிடைக்கும் என்று பரியா அப்துல்லா ஆவலாக காத்திருந்தார். ஆனால் சிக்மா படம் சரியாக போகவில்லை. இந்த நிலையில் கடந்த 2023ம் ஆண்டில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த படம் வள்ளி மயில். இந்த படத்தில் கதாநாயகி பரியா அப்துல்லா தான். அந்த படமும் 3 ஆண்டுகளாக ரிலீஸாகாமல் முடங்கி கிடப்பதால் பரியா அப்துல்லா விரக்தியில் இருந்து வருகிறார்.





