- Advertisement -
Homeபொழுதுபோக்குகடந்த ஓராண்டில் மிகவும் தளர்ந்து போன இயக்குனர் பாரதிராஜா, அவரது மறைவுக்கு அதுதான் முக்கிய காரணம்...

கடந்த ஓராண்டில் மிகவும் தளர்ந்து போன இயக்குனர் பாரதிராஜா, அவரது மறைவுக்கு அதுதான் முக்கிய காரணம் – நடிகர் ராதாரவி சொன்ன தகவல்!

- Advertisement -

உலகமே கொண்டாடும் மனிதர்களை அவர்களது நெருங்கிய உறவுகள் கொண்டாடுவதில்லை. இது இயற்கையின் விதியா சதியா என்று சொல்ல முடியவில்லை. தமிழக முதல்வராக உள்ள விஜய் நடிகராக இருந்த போதிலும் அரசியல் கட்சி துவங்கிய போதிலும் அவரை தமிழக மக்கள் கொண்டாடினர். தமிழக முதல்வராகவும் அரியணையில் அமர வைத்து விட்டனர்.

ஆனால் அவரது மனைவி சங்கீதா விஜயிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். சிக்மா என்ற படத்தை முதன் முறையாக இயக்கிய விஜய் மகன் ஜேசன் சஞ்சய் முதல்வரான தன் தந்தையை மரியாதை நிமித்தமாக கூட இதுவரை சந்திக்கவில்லை. மகள் திவ்யா சாஷா உட்பட யாருமே விஜய் முதல்வராக பதவியேற்ற விழாவில் பங்கேற்கவில்லை.

- Advertisement -

அதே போல் இசைப்புயல் ஏஆர் ரகுமான், ஜீவி பிரகாஷ்குமார் நடிகர்கள் ரவி மோகன் தனுஷ் என நட்சத்திர கலைஞர்களின் குடும்ப வாழ்க்கையில் பிரிவை சந்தித்து தனித்து வாழ்ந்து வருகின்றனர். அதிலும் நடிகர் ரவிமோகன் சந்தித்து வரும் மன உளைச்சல்களை சமீபத்தில் பிரஸ்மீட்டில் அவரே ஆவேசமாக கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா குடும்பத்திலும் பிரச்சனைகள் இருந்துள்ளது. அதிலும் முக்கியமாக அவர் தன் மகனோடு பல நாட்களாக பேசாமல் இருந்திருக்கிறார். அதுதான் அவரை இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்டது என்று நடிகர் ராதாரவி ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நடிகர் ராதாரவி கூறியதாவது, பாரதிராஜா நல்ல கற்பனை வளம் உள்ளவர். அவருக்கு 85 வயது. வாழ்க்கையில் அனைத்தையும் பார்த்துவிட்டார். வாங்காத விருதுகள் இல்லை. பழகாத தலைவர்கள் இல்லை. நல்ல இதயம் உள்ள மனிதர். அனைவரையும் வருத்தத்துக்கு ஆளாக்கிவிட்டு நம்மை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

மகன் மனோஜ் இறந்தது பாரதிராஜாவை மிகவும் பாதித்தது. மகனோடு அவர் பல நாட்களாக பேசாமல் தான் இருந்தார். இப்படி பேசாமல் இருந்தபோது மகன் நம்மை விட்டு போய்விட்டானே என்று அவர் மிகவும் உடைந்து போய்விட்டார். ஒரு மனிதன் செய்யும் சின்ன சின்ன தவறுகளை அவரும் செய்திருக்கிறார். மிகச்சிறந்த இயக்குநர் அவர். ஆனால் குடும்பத்துக்குள் அவருக்கு பிரச்னைகள் இருந்தன. அதனால்தான் அடுத்தடுத்து அவர் படம் இயக்குவதையே நிறுத்தி விட்டார் என்று நடிகர் ராதாரவி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்