- Advertisement -
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான மூக்குத்தி அம்மன் 2 தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப் ஆப் ஆதி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் வரும் அம்மன் இசையானது வீரன் என்ற படத்தில் வரும் இசையை போலவே இருப்பதாகவும். ஆதி ஹீரோவாக நடித்த படத்தில் அவரது இசையையே மீண்டும் ஆதி இதில் தந்துள்ளதாகவும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.





