- Advertisement -
Homeபொழுதுபோக்குதொடர்ந்து மேடைகளில் வரம்பு மீறும் இயக்குனர் மிஷ்கின், மௌனம் சாதிக்கும் இயக்குனர்கள் சங்கம் - அந்த...

தொடர்ந்து மேடைகளில் வரம்பு மீறும் இயக்குனர் மிஷ்கின், மௌனம் சாதிக்கும் இயக்குனர்கள் சங்கம் – அந்த முடிவு விரைவில் எடுக்கப்படுமா?

- Advertisement -

இயக்குனர் மிஷ்கின் தமிழ் சினிமாவில் விறுவிறுப்பான நல்ல படங்களை தந்திருக்கிறார். அவரது முதல் படம் சித்திரம் பேசுதடி படம் பெரிய அளவில் கவனம் பெற்றது. அடுத்து அஞ்சாதே நந்தலாலா துப்பறிவாளன் சைக்கோ போன்ற படங்களும் ரசிக்கும்படி இருந்தன. அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் படம் ரிலீஸாக உள்ளது.

ட்ரெயின் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருக்கிறார். இயக்குனராக மட்டுமின்றி நடிகராக சவரக்கத்தி மாவீரன் லியோ உள்ளிட்ட படங்களிலும் மிஷ்கின் நடிப்பு ரசிக்க வைத்தது. சமீபத்தில் வெளியான வணங்கான் படத்திலும் நீதிபதி கேரக்டரில் சிறப்பான நடிப்பை தந்திருந்தார்.

- Advertisement -

ஆனால் பொது நிகழ்ச்சிகளில், சினிமா மேடைகளில் பேசும்போது இயக்குனர் மிஷ்கின் நாகரிகமின்றி நடந்துக்கொள்கிறார். குறிப்பாக அவர் பேசும் வார்த்தைகள் வரம்பு மீறுகின்றன. சமீபத்தில் நடந்த பாலா 25 விழாவில், இயக்குனர் பாலாவை அவன் இவன் என்று மிஷ்கின் ஒருமையில் பேசியது அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது.

சில தினங்களுக்கு முன் நடந்த பாட்டல் ராதா விழாவில் பேசிய மிஷ்கின் இளையராஜா தான் எல்லோரையும் குடிகாரன் ஆக்கியவன் என்று குறிப்பிட்டார். அடுத்து அதே மேடையில் சில கெட்டவார்த்தைகளை சர்வ சாதாரணமாக பேசினார். அந்த மேடையில் அமீர் லிங்குசாமி வெற்றிமாறன் பா ரஞ்சித் போன்ற ஆளுமையான இயக்குனர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுகுறித்து தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்களோ, நடிகர்களோ யாருமே ஆட்சேபம் தெரிவிக்காத நிலையில் ஒளிப்பதிவாளரும் நடிகருமான அருள்தாஸ், மிஷ்கினின் இந்த வரம்பு மீறிய பேச்சுக்கு ஆட்சேபமும் கண்டனமும் தெரிவித்திருக்கிறார். போலி அறிவாளி மிஷ்கின், பெரிய அப்பாடக்கர் போல பேசுகிறார் என்றும் விமர்சித்திருக்கிறார்.

இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறுகையில், நடிகர் அருள்தாஸ்தான் உண்மையான ஒரு கலைஞராக தன் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். இயக்குனர் சங்கம் இனியாவது மிஷ்கின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அவர் மீது சஸ்பென்ட் போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி திரைப்பட விழாக்களுக்கு மிஷ்கினை அழைக்க கூடாது என்ற முடிவுக்கு தயாரிப்பாளர்களும் முன்வர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்