நடிகர் ரஜினிகாந்த், 170வது படம் வேட்டையன். இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கத்தில் உருவான இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ரித்திகா சிங், மஞ்சு வாரியார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வருகிற அக்டோபர் மாதம் 10ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது. ஆனால் இன்னும் அதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த படத்தை தொடர்ந்து, ரஜினிகாந்த் இப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஐதராபாத்தில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. முன்னதாக சென்னையில் உள்ள ஒரு முக்கிய பகுதியில் கூலி படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
நடிகர் அஜீத்குமார் இப்போது நடித்து வரும் விடாமுயற்சி படப்பிடிப்பு வரும் 16ம் தேதியுடன் நிறைவடைகிறது. இன்னும் அஜீத்குமார், திரிஷா நடிக்க வேண்டிய பாடல் காட்சி ஒன்று மீதம் இருக்கிறது. ஆனால் அந்த பாடல் காட்சி ஸ்பெயின் நாட்டில் எடுக்கப்படுவதாக ஒரு திட்டம் இருந்தாலும், படத்தை தயாரித்துள்ள லைகா புரடக்சன்ஸ் அதற்கு அனுமதிக்க வேண்டும். இல்லை என்றால் அந்த பாடல் இல்லாமலேயே படம் ரிலீஸ் ஆகலாம்.
விடாமுயற்சி படப்பிடிப்பும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட்பேட் அக்லி படப்பிடிப்பும் ஐதராபாத்தில் நடந்து வருவதால் பகலில் விடாமுயற்சி, இரவில் குட்பேட் அக்லி படப்பிடிப்பிலும் கலந்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். வரும் 16ம் தேதிக்கு பிறகு 24ம் தேதி வரை குட்பேட் அக்லி படப்பிடிப்பில் மட்டுமே கலந்துக்கொள்கிறார். அதன்பிறகு அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் நடத்தப்படுகிறது.
குட்பேட் அக்லி படத்தை வருகிற 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்யப்பட முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது படப்பிடிப்புக்கு அதிக கால அவகாசம் தேவை என்பதால், ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடலாம் என்ற ஒரு தகவல் கிடைத்துள்ளது.
ஆனால் அதே நாளில் தமிழ் புத்தாண்டு அன்றுதான் ரஜினி நடித்துவரும் கூலி படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. அதனால் இந்த முறை தமிழ் புத்தாண்டு தினத்தில் ரஜினி, அஜீத்குமார் நடித்த படங்கள் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த முறை விஜய் லிஸ்ட்டில் இல்லை. பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்கள் இப்படிதான் ரிலீஸ் ஆகி, ரஜினி, அஜீத் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போன்று வருகிற தமிழ் புத்தாண்டுக்கு கூலி, குட்பேட் அக்லி படங்கள் மோதுகின்றன என்பது உறுதியாகி உள்ளது.





