நடிகர் விஜய் இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் மட்டுமல்ல, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். அரசியல் கட்சித் தலைவராக உள்ள அவர், நேற்று தனது ஜனநாயக கடமையாற்ற நீலாங்கரையில் உள்ள தனது பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் தனது ஓட்டை பதிவு செய்தார் நடிகர் விஜய்.
கடந்த பிப்ரவரி 2ம் தேதி, நடிகர் விஜய் தமிழக அரசியல் களத்தில் குதித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கிய அவர், இப்போது தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக, கட்சி நிர்வாகிகளை நியமித்து வருகிறார். தொழிலாளர் அணி, தொழில்நுட்ப அணி, இலக்கிய அணி, வக்கீல் அணி என ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.
அது மட்டுமின்றி விரைவில், மாநில அளவில் கட்சியின் மாநாட்டை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். வருகிற மே அல்லது ஜூன் மாதம் அல்லது 2025 ஆண்டு துவக்கத்தில், கட்சியின் மாநில மாநாட்டை நடத்த விஜய் ஆலோசித்து வருகிறார். ஏனெனில் இன்னும் ஒரு படத்தில் அவர் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.
நடிகர் விஜயை பொருத்தவரை, மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது என்பதை அவர் பொது இடங்களுக்கு செல்லும்போது அவருக்கு கிடைக்கிற வரவேற்பும், மக்கள் மத்தியில் கிடைக்கிற அமோக ஆதரவும் வெளிப்படையாகவே தெரிகிறது. எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. தனித்து நின்று அவர் அரசியலுக்கு வருகிறார்.
வருகிற 2026 சட்டசபை தேர்தல்தான் இலக்கு, லஞ்சம் ஊழல் அற்ற வெளிப்படையான நிர்வாகம்தான் எனது குறிக்கோள், மக்களுக்கு நன்மை செய்வது மட்டுமே என்று எனது இலக்கு என்று விஜய் தனது முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தி விட்டார். ஒரு படத்தில் நடிக்க 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகர் விஜய், சினிமாவை விட்டு விலகிஅரசியலுக்கு வருவதற்கு, தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே காரணம் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நீலாங்கரையில் நேற்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் விஜய் வந்து ஓட்டு போட்டார். இப்போது அது வில்லங்கமாக இப்போது மாறி இருக்கிறது. அவர் ஓட்டு போட வரும் போது 200க்கும் மேற்பட்டோருடன் வாக்கு சாவடி மையத்துக்குள் வந்தார் என்றும் அதனால் கூச்சல், குழப்பம் பதட்டம் வாக்குச்சாவடி மையத்தில் ஏற்பட்டது என்றும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





