- Advertisement -
Homeபொழுதுபோக்குபடத்தோட டைட்டிலையே காப்பியடித்த டைரக்டருக்கு கொட்டிக்கொடுத்த சன் பிக்சர்ஸ், இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலையா?...

படத்தோட டைட்டிலையே காப்பியடித்த டைரக்டருக்கு கொட்டிக்கொடுத்த சன் பிக்சர்ஸ், இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலையா? – வெறுத்துப் போன ரசிகர்கள்

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது திரைக்கதையும், படத்தை கொண்டு சென்ற விதமும், படத்தில் இடம்பெற்ற வசனங்களும், காட்சி அமைப்பும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து மாநகரம் படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது. அதனால் லோகேஷ் கனகராஜ் பெரிய அளவில் பிரபலமானார்.

தொடர்ந்து அடுத்து கார்த்தி நடித்த கைதி, கமல்ஹாசன் நடித்த விக்ரம், விஜய் நடித்த மாஸ்டர் ஆகிய படங்களை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இதில் கைதி படம், 57 இரவுகளில் எடுக்கப்பட்ட படமாக, பாடல் இல்லாத, கதாநாயகி இல்லாத, ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவமாக அந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

- Advertisement -

இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பிளாக்பஸ்டர் மூவியாக அமைந்தது. கமல்ஹாசனுக்கு இது ஒரு கம்பேக் படமாக இருந்தது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் பெற்ற அபார வெற்றியால், இயக்குனருக்கு சொகுசு கார் பரிசளித்தார் கமல்ஹாசன்.

இந்த படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் மீண்டும் விஜயை ஹீரோவாக வைத்து எடுத்த படம் லியோ. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்எஸ் லலித்குமார் தயாரித்திருந்தார். இந்த படத்தில் விஜய், திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், அனுராக் காஷ்யப், பாலிவுட் ஸ்டார் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் 600 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.ஆனால் விமர்சன ரீதியாக இந்த படத்தை ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினர்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், அவரது 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியானது. இதில் சரத்குமார் ஏற்கனவே நடித்த தமிழ் படம், அமிதாபச்சன் ஏற்கனவே இந்தியில் நடித்த படம் கூலி. இந்த பெயரை காப்பியடித்து ரஜினி படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக, மூன்று மாதங்களாக லோகேஷ் கனகராஜ், ரூம் போட்டு உட்கார்ந்து கதை எழுதியிருந்தார். படத்தின் டைட்டில் கூலி என்ற பெயரையே டைரக்டர். இப்படி காப்பி அடித்திருப்பது சினிமா ரசிகர்களை பயங்கர கடுப்பாக்கி உள்ளது.

ரஜினி ஏற்கனவே 35 ஆண்டுகளுக்கு முன் வந்த தீ என்ற படத்தில் கூலி கேரக்டரில் நடித்திருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு முன்வந்த உழைப்பாளி என்ற படத்திலும் கூலியாக நடித்திருக்கிறார். எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல் காட்சியை, இந்த கூலி டீசரில் ரஜினி வசனமாக பேசுகிறார். இப்படி பழைய படங்களை, பாடல்களை காப்பியடித்து, டைட்டில் டீசர் இவர் வெளியிட்டு ஏமாற்றி இருக்கிறார் என்று பலரும் தலையில் அடித்துக் கொள்கின்றனர். இதில் மற்றொரு கொடுமையாக, இந்த படத்துக்காக லோகேஷ் கனகராஜுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் 60 கோடி ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளது.

- Advertisement -

சற்று முன்