- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி படம் முதல் நாள் முதல் காட்சி திரையிடும் நேரம் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல்...

கூலி படம் முதல் நாள் முதல் காட்சி திரையிடும் நேரம் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல் – கேரளாவில் அதிரி புதிரியான பப்ளிசிடிக்கு இப்படி ஒரு காரணமா?

- Advertisement -

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய கபாலி, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட படங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் நடித்த கூலி படத்துக்கு தான் மிகப்பெரிய வைப் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. இந்த படங்களுக்கு இடையில் அவர் நடித்த காலா தர்பார் அண்ணாத்த லால் சலாம் வேட்டையன் போன்ற படங்களுக்கு இவ்வளவு பரபரப்பு ரசிகர்களிடம் காணப்படவில்லை.

இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த முதல் படம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பு மற்றும் அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் மலையாளம் தெலுங்கு கன்னடம் இந்தி திரையுலகை சேர்ந்த நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கின்றனர். குறிப்பாக 37 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் சத்யராஜ் இணைந்து நடித்திருக்கிறார்.

- Advertisement -

நாளை மறுதினம் 14ம் தேதி கூலி படம் ரிலீஸாக உள்ளது. முதல் நாள் முதல் காட்சி திரையிடும் நேரம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் வழக்கம் போல காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி ரிலீஸாகிறது. அன்று 5 காட்சிகள் திரையிட்டுக்கொள்ள வாய்ப்பு உள்ளது. மறுநாள் ஆகஸ்ட் 15ம் தேதியும் 5 காட்சிகளுக்கு வாய்ப்புள்ளது. ஆனால் இன்னும் உறுதியாக அறிவிக்கவில்லை.

தமிழ்நாட்டில் நள்ளிரவு மற்றும் அதிகாலை காட்சிகளுக்கு வாய்ப்பு இல்லை. மற்ற படங்களுக்கு என்ன விதிமுறையோ அதே நேரத்தில்தான் காலை 9 மணிக்கு கூலி தமிழில் வெளியாகிறது. ஆனால் கேரளா கர்நாடகா மாநிலங்களில் காலை 6 மணிக்கு கூலி ரிலீஸாகிறது. அதே போல் அமெரிக்காவில், கூலி படம் அதிகாலை 4 மணிக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தெரிய வருகிறது.

- Advertisement -

அதனால் முதலில் கூலி படத்தை பார்க்க போகிறவர்கள் யுஎஸ்சில் வாழக்கூடிய தமிழ் ரஜினி ரசிகர்கள்தான். அதே போல் கேரளாவில் கூலி படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் இந்த படத்துக்காக ஏகப்பட்ட பப்ளிசிடி செய்யப்பட்டு வருகிறது. அதே போல் அங்கு முன்பதிவும் வேற லெவலில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வருகிற ஆகஸ்ட் 26ம் தேதி ஓணம் பண்டிகை வருகிறது. அந்த நாளில் மோகன்லால் நடித்த ஒரு படம், துல்கர் சல்மான் நடித்த ஒரு படம், பகத் பாசில் நடித்த படம் உள்பட 5 மலையாள படங்கள் வெளியாக உள்ளது. அதற்குள் கூலி படம் பெரிய வசூலை கடந்துவிட வேண்டும் என்பதால் கேரளா வினியோகஸ்தர்கள் கூலி படத்தை, இதுவரை எந்த தமிழ் படத்துக்கும் செய்யாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் பப்ளிசிடி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்