- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது... எல் சி யு-வுக்குள் வருகிறதா கூலி... புதிர்போடும் வீடியோக்களை பகிர்ந்து கேள்வி எழுப்பும் ரசிகர்கள்......

என்னது… எல் சி யு-வுக்குள் வருகிறதா கூலி… புதிர்போடும் வீடியோக்களை பகிர்ந்து கேள்வி எழுப்பும் ரசிகர்கள்… என்ன செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்….

- Advertisement -

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கூலி திரைப்படம், நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. ரஜினி திரைப்படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு இந்த திரைப்படம், முன்பதிவில் சாதனை படைத்திருப்பதாக சொல்கிறார்கள். ஏற்கனவே இந்த திரைப்படம் வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் வசூல் செய்திருப்பதாக பேசப்படுகிறது.

அதுவும் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அது விற்று தீர்ந்து விட்டதாகவும் பேசுகிறார்கள். அதுமட்டுமல்ல தமிழ் தெலுங்கு உள்ளிட்ட எந்த மொழியிலும் தற்போது முதல் நாள் காட்சிக்கான டிக்கெட் கிடைக்கவில்லை என்பதே பலருக்கு பதிலாக இருக்கிறது. அந்த அளவுக்கு அதன் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று இருக்கிறது.

- Advertisement -

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வேறு எந்த திரைப்படத்திற்கும் இல்லாத சாதனையை நிச்சயம் கூலி பெறும் என பலரும் கூறுகிறார்கள். இதற்கு ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் என்ற இரு பிம்பமே காரணம் என்று கூறலாம்.

முக்கியமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தையே பலரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். ஏற்கனவே இதற்கு முன்னதாக லியோ திரைப்படமும் மிகப் பெரும் எதிர்பார்ப்பில் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் அது, கலவையான விமர்சனத்தையே பெற்றது. குறிப்பாக இரண்டாம் பாதி சரியில்லை என்பதே பலரது கருத்தாக இருந்தது.

- Advertisement -

அதனை நிச்சயமாக லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்தில் சரி செய்திருப்பார் என்றே பலரும் கூறுகிறார்கள். இந்த திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, இது எல் சி யு வுக்குள் வராது என்று தெளிவுபடுத்தி இருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதற்கு முந்தைய பாகம் மற்றும் அடுத்த பாகம் எதுவும் இருக்காது என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால் இணையத்தில் தற்போது ரசிகர்கள் பரப்பும் வீடியோவை பார்க்கும் போது ஒருவேளை இது எல் சி யு வுக்குள் இருக்கிறதோ என்ற கேள்வியை எழ வைத்துள்ளது.

விக்ரம் திரைப்படத்திலும் 30 ஆண்டுகள் தலை மறைவு வாழ்க்கையில்தான் இருப்பார் கமல்ஹாசன். கூலி திரைப்படத்தின் முன்னோட்டத்திலும் ரஜினிகாந்த் முப்பது ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்ததாக சொல்கிறார்கள். இதே போல் விக்ரம் திரைப்படத்தில் பகத் பாஸில், துறைமுகத்தில் இருந்த அந்த இரண்டு கண்டெய்னர்கள் எங்கே என்று கேட்டிருப்பார். அதேபோல இங்கும், அமீர்கான் வரும்போது அந்த இரண்டு கண்டெய்னர்களை காட்டுகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது ஒருவேளை இதுவும் எல் சி யு வில் வருமோ என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்