இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த திரைப்படம் கூலி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் தாண்டி இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டதற்கு காரணம் லோகேஷ் கனகராஜ் தான். தனது முந்தைய திரைப்படங்களில் காட்சிகளுக்கு எந்த ஒரு சமரசமும் செய்யாமல், முழு ஈடுபாட்டுடன் சீன்களை கொடுத்து இருப்பார் லோகேஷ் கனகராஜ்.
மாநகரம் கைதி மாஸ்டர் லியோ விக்ரம் என அவரின் ஐந்து திரைப்படங்களுமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. திரைக்கதையில் சற்று தடுமாற்றம் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக படத்தைக் கொடுக்கும் போது பாஸ் மார்க் வாங்கி விடுவார் லோகேஷ் கனகராஜ். லியோ திரைப்படமும் அப்படிதான்.
படத்தின் முதல் பாதி நன்றாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் அவர் கோட்டை விட்டு இருப்பார். குறிப்பாக ஃப்ளாஷ்பேக் காட்சியில் ஏன் அந்த நரபலி சம்பவங்கள் எல்லாம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். பின்னர் அது தவறுதான் என்று உணர்ந்து கொள்வதாக ஒரு பேட்டியில் இயக்குனர் தெரிவித்திருந்தார்.
இப்படியான சூழலில் லோகேஷ் கனகராஜுக்கு வெளியாகியிருக்கும் கூலி திரைப்படம் அவரது திரையுலக கரியரிலேயே மோசமான படமாக வந்திருக்கிறது. முதல் பாதி இரண்டாம் பாதி இரண்டுமே சரியில்லை என்றும், எதற்கு இப்படி ஒரு கதையை அவர் கொண்டு வந்தார் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக எந்த காட்சியிலும் லாஜிக்கே இல்லை என்று அவர்கள் புலம்பி வருகின்றனர்.
சத்யராஜ் கதாபாத்திரத்தில் இருந்து கேள்வி எழுப்பும் ரசிகர்கள், கதாபாத்திரங்கள் மிகவும் வீக்காக எழுதப்பட்டிருப்பதாக சொல்கின்றனர். மிக முக்கியமாக லோகேஷ் கனகராஜின் முந்தைய திரைப்படங்களில் ரெட்ரோ பாடல்கள் நன்றாக இருக்கும். ஆனால் கூலி திரைப்படத்தில் அந்த செலக்சன் கூட சரியில்லை என்று சொல்லி வருகின்றனர் ரசிகர்கள்.
இப்படி ஒட்டு மொத்தமாக கூலி திரைப்படத்தின் மூலம் டேமேஜ் ஆகி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவரது நண்பரான ரத்தினகுமார் படத்தில் இல்லாததும் ஒரு மைனஸ் ஆகவே இணையத்தில் சிலர் பேசுகின்றனர். இருப்பினும், நிச்சயம் லோகேஷ் கனகராஜ் அடுத்த திரைப்படத்தில் மீண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் இணையத்தில் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.





