- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி நடித்த கூலி படத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா, அதற்கு சூப்பர் ஸ்டார் கொடுத்த பதிலடி...

ரஜினி நடித்த கூலி படத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா, அதற்கு சூப்பர் ஸ்டார் கொடுத்த பதிலடி – தலைவர் எப்பவுமே வேற லெவல்தாம் பா!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. அதற்கு முன்பாக கடந்த 22ம் தேதி இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்கிறார். இது ரஜினிக்கு 171 படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது.

இந்த படத்தில் ரஜினிகாந்த் இரண்டு அல்லது மூன்று வேடங்களில் நடிக்க வாய்ப்புள்ளது. மாஸ்டர் ராகவா லாரன்ஸ், ஷாருக்கான் அல்லது ரன்வீந்தர் சிங், ஷோபனா, ஜீவன் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக முதல்கட்ட தகவல்கள் உள்ளன. ஆனால் எதுவும் இன்னும் அதிகாரபூர்வமானதாக அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே கூலி பட டைட்டில் டீசர் வெளியான போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. கூலி என்பது பழைய படங்களின் பெயர். இந்த பெயரில் இந்தியில் 1982ல், அமிதாப் பச்சன் நடித்த படம் வெளிவந்துள்ளது. தமிழில் சரத்குமார் – மீனா நடிப்பில் பி வாசு இயக்கிய படத்தின் பெயரும் கூலி என்பதால், படத்தின் டைட்டிலே காப்பி தானா என்று இயக்குனரை கண்டபடி சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.

இந்த சூழலில், கூலி டீசரில் வா வா பக்கம் வா என்ற பாடலில் இடம்பெற்ற பிஜிஎம் டிஸ்கோ டிஸ்கோ என்ற தன்னுடைய இசையை பயன்படுத்தியதாக, இளையராஜா, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் தொடர்ந்து தனது படங்களில் என்னுடைய இசையை பயன்படுத்தி வருகிறார் என லோகேஷ் கனகராஜை சகட்டுமேனிக்கு திட்டி தீர்த்திருக்கிறார் இளையராஜா.

ஒரு பாடலை பொருத்தவரை இசையமைத்த இசையமைப்பாளர், பாடலை எழுதிய கவிஞர், பாடலை பாடிய பாடகர் என மூவருக்குமே பொதுவானது. அதைவிட முக்கியம் இந்த மூன்று பேருக்குமே சம்பளம் கொடுத்த படத்தின் தயாரிப்பாளர்தான் அதை சொந்தம் கொண்டாட முடியும். ஆனால், இதை என் பாட்டு என் பாட்டு என இளையராஜா மார்தட்டிக் கொள்வது அவரது ரசிகர்கள் பலருக்கே பிடிக்கவில்லை. ஏன் இவ்வளவு சுயநலமாக இசைஞானி சிந்திக்கிறார் என வருத்தப்படுகின்றனர்.

கூலி படத்தின் டீசரில் நடித்திருப்பது ரஜினிகாந்த். அவரது படத்தில் இடம்பெற்ற இசைக்கு, இப்படி இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது ரஜினி ரசிகர்களுக்கு பயங்கர அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்திடம் இந்த விஷயம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, காப்புரிமை விவகாரம் என்பது இசையமைப்பாளருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே இருக்கும் பிரச்னை, என்று பதில் தெரிவித்துள்ளார்.

சற்று முன்