- Advertisement -
Homeபொழுதுபோக்குகப்பல் துறைமுகத்தில் நடக்கும் கேங்ஸ்டர் கதைதான் கூலி… வழக்கமான அடிதடி பஞ்சாயத்து ஹீரோயிசம் பில்டப் தான்…...

கப்பல் துறைமுகத்தில் நடக்கும் கேங்ஸ்டர் கதைதான் கூலி… வழக்கமான அடிதடி பஞ்சாயத்து ஹீரோயிசம் பில்டப் தான்… அடப் போங்கப்பா என கொட்டாவி விடும் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் 14ம் தேதி கூலி படம் வெளியாக உள்ள நிலையில் அந்த படத்தின் டிரெய்லர் சற்று முன்பு வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, இப்போது சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடந்துக் கொண்டிருக்கிறது.

கூலி படத்தின் 3 நிமிட டிரெய்லர் காட்சிகளின் மூலம் இதுவும் ஒரு கேங்ஸ்டர் கதைதான் என்பதும் கப்பல் துறைமுகத்தில் இந்த படத்தின் கதைக்களம் இருப்பதும் தெரிய வந்துள்ளது. சத்யராஜின் மகளாக ஸ்ருதிஹாசனும் ரஜினியின் நண்பராக சத்யராஜூம் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் வழக்கமான ஹீரோயிசம் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது ரஜினி பேசும் டயலாக்கில் வெளிப்படுகிறது.

கைதி விக்ரம் லியோ பட வரிசையில் இதுவும் ஒரு கேங்ஸ்டர் படமாக தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எடுத்திருக்கிறார். படம் முழுக்க ரத்தம் தெறிக்கும் காட்சிகள் நிறைய இருப்பதால்தான் இந்த படத்துக்கு தணிக்கைக்குழு ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. இந்த படத்தில் மல்டிபில் ஸ்டார் நடிகர்கள் நடித்திருப்பது படத்துக்கு பலமாக மாறுமா என்பது படம் வெளியான பிறகுதான் தெரிய வரும்.

தமிழ் சினிமாவில் லப்பர் பந்து பார்க்கிங் குடும்பஸ்தன் குட்நைட் டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற யதார்த்த கதைக்களத்தில் உருவான படங்கள் அவ்வப்போது வந்து ரசிகர்களை காப்பாற்றினாலும் கூலி போன்ற படங்களும் வெளியாகி மீண்டும் மீண்டும் தமிழ் சினிமாவை கமர்ஷியல் குப்பையாக மாற்றாமல் விடப்போவது இல்லை என்பது தெளிவாகிறது.

இப்படி இரண்டு கேங்குகள் சண்டையிட்டு கொள்வதை ஒருவருக்கு ஒருவர் ஆக்ரோஷமாக அடித்துக்கொண்டு சாவதை அதுபோன்ற கதைக்களத்தில் ஒரு படமாக வெளிவருவதால் ரசிகர்களுக்கு என்ன சந்தோஷம் மகிழ்ச்சி பொழுதுபோக்கு கிடைத்து விடப்போகிறது என்பதுதான் யதார்த்த சினிமாவை விரும்பும் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

ஒரு திரைப்படம் வெளிவந்தால் ரசிகர்களுக்கு என்ன நன்மை, ஒரு படம் வெளிவராமல் போவதால் ரசிகர்களுக்கு என்ன இழப்பு என்று யோசித்து பார்த்தால், கமர்ஷியல் என்ற பெயரில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் ரசிகர்களின் நேரத்தை பணத்தை வீணாக்கும் குப்பை படங்களாகவே இருக்கின்றன. அந்த லிஸ்ட்டில் கூலி படமும் இணைந்து விடுமா, அல்லது ஜனரஞ்சகமாக நல்ல பொழுதுபோக்கு படமாக அமையுமா என்பதற்கு வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி விடை தெரிந்துவிடும்.

சற்று முன்