- Advertisement -
Homeபொழுதுபோக்குதி கோட் படம் பார்த்து அசந்து போன நடிகர் விஜய், ஆனா வெங்கட்பிரபு கிட்ட அவர்...

தி கோட் படம் பார்த்து அசந்து போன நடிகர் விஜய், ஆனா வெங்கட்பிரபு கிட்ட அவர் இப்படி சொல்லி இருக்கிறாரே…? டைரக்டரே…தளபதி சொன்னது சரியா வருமா?

- Advertisement -

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் ரெடியாகி வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பே ஷூட்டிங் நடந்து முடிந்த நிலையில் இப்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் விஎப்எக்ஸ் தொழில்நுட்ப பணிகள் வேகமாக நடந்து வருகின்றன, வருகிற செப்டம்பர் 5ம் தேதி தி கோட் அறிவித்தப்படி உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கடந்தாண்டில் வெளிவந்த லியோ படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. ஏனெனில் படத்தின் முதல் பாதி சிறப்பாக இருந்த நிலையில், இரண்டாம் பாதி சொதப்பி விட்டது.

- Advertisement -

இப்போது வெளியாகும் பல படங்கள் முதல் பாதி மிக சிறப்பாக இருக்கிறது. இரண்டாம் பாதி அந்தளவுக்கு ரசிகர்களை திருப்திபடுத்துவதில்லை. குறிப்பாக சமீபத்தில் வெளியான இந்தியன் 2, ராயன் படங்களில் கூட முதல் பாதி அளவுக்கு இரண்டாம் பாதி அந்தளவுக்கு விறுவிறுப்பாக இல்லை என்று கூறுகின்றனர். இதே விமர்சனம் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் 2ம் பாதிக்கும் வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் அர்ச்சனா கல்பாத்தி, தி கோட் படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டு, சந்தோஷமடைந்துள்ளார். படம் சிறப்பாக இருப்பதாக இயக்குனர் வெங்கட்பிரபுவை பாராட்டியும் இருக்கிறார். அதே போல் இயக்குனர் வெங்கட்பிரபு, படத்தின் நாயகன் விஜய்க்கும் இந்த படத்தின் பாதியை போட்டு காட்டியுள்ளார்.

- Advertisement -

தி கோட் படத்தின் முதல் பாதியை பார்த்து அசந்துபோன நடிகர் விஜய், மிகவும் உற்சாகமாகி இருக்கிறார். படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. பயங்கர சந்தோஷமாக உள்ளது என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜய், இயக்குனர் வெங்கட்பிரபுவிடம், தி கோட் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனால் முதல் பாதியை போலவே, இரண்டாவது பாதி படத்தையும் அதே வேகத்தில் கவனமாக பண்ணுங்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

ஏனெனில் வெங்கட்பிரபு முதல் பாதியை சிறப்பாக கொடுத்துவிட்டு, இரண்டாம் பாதியில் சொதப்பி விட்டால் என்ன செய்வது, என்ற பயம் நடிகர் விஜய்க்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இப்போதெல்லாம் ரசிகர்கள் படம் பார்க்கும்போதே விமர்சனங்களை செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். அதனால் முதல் பாதியை போலவே, இரண்டாம் பாகத்தையும் கவனமாக செய்து வெற்றிப் படமாக கொடுங்கள் என்று இயக்குனர் வெங்கட்பிரபுவுக்கு அறிவுறுத்தி இருக்கிறார் நடிகர் விஜய்.

- Advertisement -

சற்று முன்