- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது விஜய்க்கு போட்டியாக ரஜினி இந்த வேலையை பார்த்துட்டு இருக்காரா? என்னய்யா இது புது டிவிஸ்ட்டா...

என்னது விஜய்க்கு போட்டியாக ரஜினி இந்த வேலையை பார்த்துட்டு இருக்காரா? என்னய்யா இது புது டிவிஸ்ட்டா இருக்குது? – ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான்

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் வருகிற 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இரு வேடங்களில் விஜய் நடித்துள்ள இந்த படத்தில் மீனாட்சி செளத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில் மைக் மோகன் வில்லனாக நடித்துள்ளார்.

தி கோட் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதுவரை 4 பாடல்கள் வெளிவந்துள்ள நிலையில் 5வதாக இளையராஜா பாடல் ஒன்றை ரீமிக்ஸ் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மறைந்த நடிகர்கள் விஜயகாந்த், விவேக் ஏஐ தொழில்நுட்பத்தில் இந்த படத்தில் வருகின்றனர்.

- Advertisement -

கடந்த 2 வாரங்களாக தி கோட் படத்தின் அப்டேட் தொடர்ந்து வந்துக் கொண்டுள்ள நிலையில், இயக்குனர் வெங்கட்பிரபு, நடிகர்கள் பிரேம்ஜி, வைபவ், படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர், படத்துக்கு பிரமோ செய்து வருகின்றனர். இதற்காக பல சானல்களில் நேர்காணல் தந்து வருகின்றனர்.

இதனால் தொடர்ந்து தி கோட் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் டிரண்டிங் ஆகி வருகின்றன. இது படத்தை இன்னும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் ரீச் செய்து வருகிறது. இதற்கு போட்டியாக தான் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டுகளும் வெளியிடப்படுவதாக ஒரு விமர்சனம் எழுந்துள்ளது.

- Advertisement -

அதாவது கூலி படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் அவர்களது கேரக்டர்கள் குறித்து தொடர்ந்து படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தினமும் லேட்டஸ்ட் அப்டேட், போஸ்டருடன் வெளியிட்டு வருகிறார். படத்தில் நடிக்கும் சத்யராஜ், உபேந்திரா, நாகர்ஜூனா என அவரவர் கேரக்டர்களுடன் அப்டேட் செய்யப்படுகிறது.

விஜய், ரஜினி இடையே இன்னும் மறைமுகப் பனிப்போர் நீடிக்கிறது. அதனால்தான் தி கோட் படம் வெளியான பிறகு, அடுத்த பெரிய படமாக தனது வேட்டையன் படத்தை ரஜினி ரிலீஸ் செய்ய வேண்டும் என விடாப்பிடியாக இருந்தார். தி கோட் வெற்றியை, வசூலை வேட்டையன் முறியடிக்க வேண்டும் என்பதே ரஜினியின் ஆசை. அதே போல் தி கோட் படம் குறித்த அப்டேட்டுகளின் போது தனது கூலி படம் குறித்த அப்டேட்டுகளை அடுத்தடுத்து வெளியிட செய்திருக்கிறார் என்று ஒரு தகவல் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

- Advertisement -

சற்று முன்