- Advertisement -
Homeபொழுதுபோக்குநல்ல படத்துக்கு இல்லே, ஆனா கடத்தல்காரன் ஹீரோவா நடிச்சா தேசிய விருது கிடைக்குது - புஷ்பா...

நல்ல படத்துக்கு இல்லே, ஆனா கடத்தல்காரன் ஹீரோவா நடிச்சா தேசிய விருது கிடைக்குது – புஷ்பா படம் குறித்து விமர்சித்த தெலங்கானா முதல்வர்!

- Advertisement -

இயக்குனர் சுகுமாறன் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் ராஷ்மிகா மந்தனா சுனில் பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 5ம் தேதி வெளியான படம் புஷ்பா 2. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் புஷ்பா முதல் பாகம் வெளியான நிலையில், சிறந்த நடிகர் தேசிய விருது அல்லு அர்ஜூனுக்கு வழங்கப்பட்டது. இப்போது புஷ்பா 2ம் பாகமாக வெளியாகி 2 வாரங்களில் 1500 கோடி ரூபாய்க்கு வசூலித்துள்ளது.

ஆனால் துரதிஷ்டவசமாக புஷ்பா 2 பிரிமியர் ஷோ நடந்த போது, அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது 9 வயது மகனும் உயிருக்கு ஆபத்தான் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்துக்காக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த நடிகர் அல்லு அர்ஜூன் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் தருவதாக அறிவித்துள்ளார்.

- Advertisement -

ஆனால் பிரிமியர் ஷோ நடந்த ஐதராபாத் சந்தியா தியேட்டருக்கு போலீஸ் அனுமதி மறுத்தும் நடிகர் அல்லு அர்ஜூன் அங்கு வந்ததாகவும், காரின் மேல்பகுதி ஜன்னலை திறந்து பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் ரோடு ஷோ நடத்தியதாகவும் சட்டசபையில் பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டினார்.

கூட்ட நெரிசல் ஏற்படும், ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என போலீசார் தெரிவித்தும் அனுமதி மறுத்தும் தியேட்டருக்கு நடிகர் அல்லு அர்ஜூன் வந்துள்ளார். அவரை பார்க்க முண்டியடித்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த போதிலும் அவர் தியேட்டரை விட்டு வெளியேறாமல் படம் முடியும் வரை தியேட்டருக்குள் இருந்துள்ளார். அதற்கான சிசிடிவி காட்சிள் உள்ளதாக ஐதராபாத் போலீசார் கூறியுள்ளார்.

- Advertisement -

இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் கைதாகி, ஜாமீனில் வெளிவந்துள்ளார். அவரது ஜாமீன் உத்தரவை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய ஐதராபாத் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஒரு அமைப்பினர் நேற்று முன்தினம் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கற்களை வீசி, பூத்தொட்டிளை உடைத்து தாக்கியுள்ளனர். இதில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ள தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஜெய்பீம் போன்ற படங்களுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை. ஆனால் செம்மர கடத்தல் கும்பல் பற்றிய படத்துக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. ஒரு கடத்தல்காரரை ஹீரோவாகவும், காவல் துறையை வில்லனாகவும் சித்தரித்த படம்தான் புஷ்பா என்று கடுமையாக விமர்சித்துள்ளார். ஒரு மாநிலத்தின் முதல்வர் தேசிய விருது பாரபட்சத்தை சுட்டிக்காட்டி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்