- Advertisement -
Homeபொழுதுபோக்குஇரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும், தங்கலான் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடக் கூடாது; உடனடியாக...

இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும், தங்கலான் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடக் கூடாது; உடனடியாக தடை விதிக்க கோரி கோர்ட்டில் வழக்கு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பா ரஞ்சித். அட்டக்கத்தி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானர். அடுத்து அவர் இயக்கிய மெட்ராஸ், கபாலி, காலா மற்றும் சமீபத்தில் வெளியான தங்கலான் என ரசிகர்களின் கவனம் பெற்ற வெற்றி படங்களாகவும் இருக்கின்றன.

இந்நிலையில் சீயான் விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளியானது. இந்த படத்தில் விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வந்து இந்த படம் ரூ. 100 கோடி வரை வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் ரூ. 100 கோடி வசூலித்த 6 படங்களில் தங்கலான் படமும் ஒன்றாக உள்ளது.

- Advertisement -

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியில் வெளியான தங்கலான் படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அடுத்தபடியாக தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு படக்குழு தயாரானது. இந்த படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தங்களது ஓடிடி தளத்தில் டிஜிட்டல் உரிமம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் தற்போது செய்யப்பட்டது. இந்த படத்தை வெளியிடாமல் தடை செய்ய வேண்டும் என்றும் அந்த மனுத்தாக்கலில் கூறப்பட்டுள்ளது. திருவள்ளூரைச் சேர்ந்த பொற்கொடி என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

- Advertisement -

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, புத்த மதம் குறித்து புனிதமாகவும், வைணவம் குறித்து நகைச்சுவையாகவும் சித்தரிக்கும் விதமாக தங்கலான் படத்தில் பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனால் தங்கலான் படம் ஓடிடியில் வெளியானால் இரண்டு பிரிவுகளிடையே மோதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதனால் தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனால் தங்கலான் படம் ஓடிடியில் வெளியாவது இன்னும் தள்ளிப் போகலாம் என்று கூறப்படுகிறது. தங்கலான் படத்தை திரையில் பார்க்க தவறவிட்டவர்கள், ஓடிடி தளத்தில் எப்போது வெளியாகும் என்று காத்திருக்கும் சூழலில், இப்போது இந்த படத்தை தடை செய்யக் கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருப்பது ரசிகர்களிடையே பலத்தை ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்