- Advertisement -
Homeபொழுதுபோக்குலக்கி பாஸ்கர் படத்தில் அந்த விஷயத்தை செய்ய மறுத்து அடம்பிடித்த நடிகர் துல்கர் சல்மான் -...

லக்கி பாஸ்கர் படத்தில் அந்த விஷயத்தை செய்ய மறுத்து அடம்பிடித்த நடிகர் துல்கர் சல்மான் – டிரெய்லர் செய்த மாயத்தால் தானாக வழிக்கு வந்த ஹீரோ!

- Advertisement -

மலையாள நடிகர் மம்முட்டி இந்திய அளவில் ரசிகர்களை கொண்ட ஒரு சிறந்த நடிகராக இருந்து வருகிறார். சமீபத்தில் பிரமயுகம் என்ற படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் தளபதி படத்தில் ரஜினியுடன் நடித்த மம்முட்டி, தமிழ் சினிமா ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார்.

தமிழில் ஆனந்தம், மறுமலர்ச்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், கார்மேகம், ஜூனியர் சீனியர், வந்தே மாதரம், எதிரும் புதிரும், அரசியல், புதையல், மக்களாட்சி, கிளிப் பேச்சு கேட்கவா, அழகன், மௌனம் சம்மதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இந்த படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன.

- Advertisement -

நடிகர் மம்முட்டியின் மகன்தான் துல்கர் சல்மான். இவர் மலையாளத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர். தமிழில் ஓ காதல் கண்மணி, சீதாராமம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், நடிகையர் திலகம், வாயை மூடி பேசவும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவராக இருக்கிறார்.

கடந்த தீபாவளியன்று துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படம் வெளியானது. தெலுங்கு மொழியில் உருவான பான் இந்தியா படமான லக்கி பாஸ்கர் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் என பிறமொழிகளிலும் வெளியானது. லக்கி பாஸ்கர் படம் பெரிய அளவில் வெற்றி பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுவரை 40 கோடி ரூபாய் கடந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது.

- Advertisement -

துல்கர் சல்மான் மலையாளத்தில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பிறமொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் பான் இந்தியா நடிகராக இருந்து வருகிறார். அதனால் லக்கி பாஸ்கர் நடித்து முடித்த பிறகு, மற்ற படங்களில் நடிக்க கமிட்மென்ட் இருப்பதால், பிஸியாக இருப்பதால், லக்கி பாஸ்கர் படத்துக்கு தமிழில் டப்பிங் பேச முடியாது என மறுத்துவிட்டார். படக்குழு வற்புறுத்தியும் அவர் சம்மதிக்கவில்லை.

இந்நிலையில், லக்கி பாஸ்கர் டிரெய்லர் வெளியானது. டிரெய்லரில் ஏஐ தொழில்நுட்பத்தில் துல்கர் சல்மான் குரல் ஒலித்தது. வழக்கமான அவரது கணீர் குரலை கேட்டு ரசித்த தமிழ் ரசிகர்கள், டிரெய்லரில் ஏஐ தொழில்நுட்பத்தில் ஒலித்த குரலை கேட்டு அதிருப்தியடைந்தனர். இதுபற்றி அறிந்த துல்கர் சல்மான், ரசிகர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து லக்கி பாஸ்கர் படத்தின் தமிழ் வெர்சனுக்கு அவரே டப்பிங் பேச முன்வந்திருக்கிறார். இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்