- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் திலகம் சிவாஜி கணேசன் இல்லத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்ட வழக்கில் இறுதி விசாரணை -...

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இல்லத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்ட வழக்கில் இறுதி விசாரணை – சென்னை ஐகோர்ட் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிப்பு சக்ரவர்த்தியாக திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். செவாலியே தாதா சாகிப் பால்கே போன்ற உயரிய விருதுகளால் பெருமைப்படுத்தப்பட்டவர். நடிப்பு பல்கலைக் கழகமாக தமிழ் சினிமா நடிகர்களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்தவர். இன்றும் சிவாஜியை கொண்டாடும் ரசிகர்கள் கோடிக்கணக்கில் இருந்து வருகின்றனர்.

நடிகர் சிவாஜி கணேசனுக்கு ராம்குமார் பிரபு என 2 மகன்கள் உள்ளனர். இதில் ராம்குமாரின் மகன் சிவாஜியின் பேரன் துஷ்யந்த் நடிகராகவும் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் தனது மனைவி அபிராமியுடன் இணைந்து ஜெகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் நிவேதா பெத்துராஜ் நடித்திருந்தனர்.

ஜெகஜால கில்லாடி படத்தை தயாரிப்பதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து 30 சதவீதம் வட்டிக்கு 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் தயாரிப்பாளர் துஷ்யந்த் கடனாக வாங்கியிருந்தார். ஆனால் சொன்ன கால அவகாசத்துக்குள் அந்த கடன் தொகையை வட்டியுடன் துஷ்யந்த் அந்த நிறுவனத்துக்கு திருப்பித் தரவில்லை.

இதையடுத்து தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் திரைப்பட தயாரிப்பாளர் துஷ்யந்த் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து 9 கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும் கடன் தொகையை கொடுக்காததால் நடிகர் சிவாஜி கணேசனுக்கு சொந்தமான அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்யவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

ஆனால் அன்னை இல்லம் வீடு என் பெயரில் உள்ளது; இந்த வீடு எனக்கு மட்டுமே சொந்தமானது. அன்னை இல்லம் வீட்டுக்கும் என் அண்ணன் ராம்குமார் குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சிவாஜியின் இளைய மகன் நடிகர் பிரபு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அன்னை இல்லம் ஜப்தி உத்தரவு திரும்ப பெறப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி கே ஆர் ஸ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனபாக்கியம் என்டர்பிரைசஸ் தரப்புக்கும் தயாரிப்பாளர் துஷ்யந்த் தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதாக கூறி வழக்கை திரும்ப பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். இதனால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீடு ஜப்தி என்ற பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதால் சிவாஜி ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

சற்று முன்