- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சிங்கமுத்து மீது நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கு - பரபரப்பு தீர்ப்பு வழங்கிய...

நடிகர் சிங்கமுத்து மீது நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கு – பரபரப்பு தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் வடிவேலு. வைகைப்புயல் வடிவேலு என்று ரசிகர்கள் அவரை அழைக்கின்றனர். காமெடி நடிப்பில் வடிவேலுவுக்கு நிகர் வடிவேலுதான் என்று சொல்லும் அளவுக்கு நகைச்சுவை கேரக்டர்களில் வடிவேலு அசத்தியவர். இம்சை அரசன் 23ம் புலிகேசி தெனாலிராமன் இந்திரலோகத்தில் நா அழகப்பன் எலி போன்ற படங்களில் வடிவேலு கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.

நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி காட்சிகளில் இணைந்து நடித்தவர் நடிகர் சிங்கமுத்து. இவர்கள் இருவரும் சேர்ந்து செய்த பல காமெடி காட்சிகள் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றன. ஆனால் ஒரு கட்டத்தில் வடிவேலு சிங்கமுத்து இருவருக்கும் இடையே எடுத்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் ஒன்றாக சினிமாவில் சேர்ந்து நடிப்பதில்லை.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் சிங்கமுத்து யூடியூப் சேனல்களில் பங்கேற்ற நேர்காணல்களில் பேசும் போது நடிகர் வடிவேலு குறித்து தரக்குறைவாக விமர்சித்தார். வடிவேலு மிகவும் மோசமானவர். அவர் நல்ல மனிதரே இல்லை என்றும் பல நேர்காணல்களில் நடிகர் வடிவேலு குறித்து இழிவாக விமர்சித்து பேசி இருந்தார்.

இதுகுறித்து நடிகர் வடிவேலு கடந்த ஆகஸ்ட் மாதம் சிங்கமுத்து மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். தன்னைப் பற்றி சிங்கமுத்து யூடியூப் சேனல்களில் தொடர்ந்து தரக்குறைவாக பேசியதால் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக அவர் தர வேண்டும். அத்துடன் என்னைப் பற்றி அவதூறு பரப்ப சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறி இருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதிகள், இனிமேல் வடிவேலு குறித்து அவதூறாக பேசக்கூடாது. வடிவேலு பற்றி ஏற்கனவே சிங்கமுத்து பேசிய வீடியோக்களை யூடியூப்பில் இருந்து நீக்க வேண்டும். மேலும் இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று சிங்கமுத்துவுக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், சிங்கமுத்து பதில் மனு தாக்கல் செய்யாததால், அவர் வடிவேலு பற்றி அவதூறாக பேச தடை விதிக்கப்பட்டது. ஒருதலை பட்சமாக விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்க வேண்டும் என சிங்கமுத்து தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் வடிவேலு குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில், நடிகர் சிங்கமுத்துவுக்கு 2500 ரூபாய் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து வடிவேலுவுக்கு எதிராக இனிமேல் அவதூறு கருத்து தெரிவிக்க மாட்டேன் என்று நடிகர் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது. வடிவேலு விவகாரத்தில் சிங்கமுத்துவுக்கு கோர்ட் அபராதம் விதித்தது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்