தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் ஒரு முக்கிய நடிகராக இருப்பவர் சீயான் விக்ரம். டைரக்டர் பாலா இயக்கத்தில் சேது படம் மூலம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீயான் விக்ரம், தொடர்ந்து பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
அவரது நடிப்பில் வெளிவந்த பிதாமகன், சாமி, அந்நியன், ஐ, காசி, ராவணன் உள்ளிட்ட பல படங்களில் விக்ரம் நடிப்பு வேற லெவலில் இருந்தது. கடந்தாண்டில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 பாகங்களிலும் சீயான் விக்ரம் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்ததாக ரசிகர்கள் பாராட்டினர். நடிகர் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் தனது கேரக்டருக்காக உடலையும் மனதையும் வருத்திக் கொண்டு நடிப்பதில் நடிகர் சியான் விக்ரம் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடித்த படம் தங்கலாம். கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீசான இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வரவேற்பை பெற்றாலும், விமர்சன ரீதியாக இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் வெளியாகி இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் ஓடிடி தளத்தில் இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய டிஜிட்டல் உரிமம் பெற்ற நெட்பிளிக்ஸ் நிறுவனம், முதலில் வாங்கிய விலையில் இருந்து ரூபாய் 12 கோடி குறைத்துக்கொண்டு 36 கோடி ரூபாய்க்கு இந்த படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை ஐ கோர்ட்டில் கடந்த வாரத்தில் தங்கலான் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் புத்த மதம் குறித்தும் புனிதமாகவும், புனிதமான வைணவ மதத்தை நகைச்சுவையாக இழிவுபடுத்தி சித்தரித்தும் தங்கலான் படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த படம் ஓடிடியில் வெளியானால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் வாய்ப்புள்ளது.
அதனால் தங்கலான் படத்தை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யக்கூடாது என்று மனுதாரர் அதில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு என்று விசாரணைக்கு வந்த நிலையில், தணிக்கைச் சான்று பெற்று திரையரங்குகளில் வெளியாகி ஓடிய தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தங்கலான் படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





