நடிகர் விஜய் நடிப்பில், கடந்தாண்டு அக்டோபர் 19ம் தேதி வெளியான படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் வேற லெவலில் எதிர்பார்த்தனர். ஏனெனில் ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட், வாரிசு படங்கள் பெரிய அளவில் ஏமாற்றத்தை தந்த நிலையில், லியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
அதுமட்டுமின்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், விக்ரம், கைதி போன்ற தரமான சம்பவங்கள் நிறைந்த படங்களை தந்தவர் என்பதால், லியோ படமும் கொண்டாடக்கூடிய ஒரு படமாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், லியோ படம் பீஸ்ட், வாரிசு படங்களை விட செமையான மொக்கை படமாக அமைந்தது. குருவி, சுறா வரிசையில் இணைந்தது. ஆனால் வசூல் மட்டும் குவிந்தது.
அதனால் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்துக்கு ரசிகர்கள் பெரிய அளவில் காத்திருக்கின்றனர். மாநாடு, மங்காத்தா, சென்னை 28 போன்ற படங்களின் வரிசையில், இதுவும் தரமான சம்பவமாக வெங்கட்பிரபுவின் மேஜிக் படமாக இருக்கும் என்றும் பலவிதமான எதிர்பார்ப்புகளுடன் உள்ளனர்.
ஆனால் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளிவந்த விசில் போடு பாடல் வீடியோவை பார்த்த சினிமா ரசிகர்கள், மிகவும் ஏமாற்றமடைந்தனர். விஜய் இதுவரை பாடிய பாடல்களில், இதுதான் சுமாரான பாடல், இசை மற்றும் பாடல் வரிகள் எதுவுமே சரியில்லை, விஜய்க்கான முக்கியத்துவம் இந்த பாடலில் இல்லை என்றும் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், வரும் செப்டம்பர் 5ம் தேதி தி கோட் படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் டீஏஜிங் மற்றும் சிஜி தொழில்நுட்ப பணிகளை முடிப்பதில், காலதாமதம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 10ம் தேதிக்குள் அந்த பணியை முடிப்பதாக ஒத்துக்கொண்ட அந்த தொழில்நுட்ப நிறுவனம், மேலும் ஓரிரு வாரங்கள் கூடுதலாக ஆகும் எனத் தெரிவித்துள்ளது.
ஏனெனில் இதில் படத்தின் நாயகன் விஜய்க்கு மட்டுமின்றி பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன் என 4 பேருக்கு டீ ஏஜிங் செய்து, இளமையாக காட்டுவதால், அந்த பணிகளை முடிப்பதில் இழுபறியும், காலதாமதமும் ஏற்படுகிறது. மேலும். அதன்பிறகு டிஐ எனப்படும் தொழில்நுட்ப பணிகளும் செய்ய வேண்டி இருப்பதால், அறிவித்தபடி செப்டம்பர் 5ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என்ற நிலையில் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் அப்செட்டில் உள்ளனர். எனினும் ஆகஸ்ட் மாதம்தான், படத்தின் ரிலீஸ் தேதி உறுதியாக தெரிய வரும்.





