- Advertisement -
நடிகர் அஜீத்குமார் சொந்தமாக அவரே தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம் டேர் டெவில். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற நவம்பர் 2ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் துவங்க உள்ளது. இதற்காக அங்கு மிக பிரமாண்டமான கேஸினோ செட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஸ்டுடியோவில் அஜீத்குமாரின் பல படங்கள் ஏற்கனவே படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. குட் பேட் அக்லி படம் போலவே டெர்டெவில் படமும் சீட்டாட்டம் சூதாட்டம் நிறைந்த காட்சிகளுடன் உருவாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.





