- Advertisement -
Homeபொழுதுபோக்குகுட்பேட் அக்லியா, இட்லி கடையா? ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வரப்போவது எது? - ஏகே...

குட்பேட் அக்லியா, இட்லி கடையா? ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வரப்போவது எது? – ஏகே தனுஷ் ரசிகர்களின் குழப்பத்துக்கு கிடைச்சாச்சு பதில்!

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்தாண்டில் வெளியாக மாஸ் ஹிட் ஆன படம் ராயன். இது தனுஷின் 50வது படம். இந்த படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார். துஷாரா விஜயன் சந்தீப் கிஷன் காளிதாஸ் ஜெயராம் சரவணன் எஸ்ஜே சூர்யா பிரகாஷ் ராஜ் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம், 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது.

இதையடுத்து நாளை தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படம் ரிலீஸாகிறது. இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடித்துள்ள இந்த படத்தில் கேமியோ ரோலில் சில காட்சிகளில் மட்டுமே நடிகர் தனுஷ் நடித்துள்ளார்.

ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய 3 படங்களை டைரக்ட் செய்துள்ள நடிகர் தனுஷ் இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள படம் இட்லி கடை. தனுஷ் நித்யாமேனன் பாரதிராஜா சத்யராஜ் ராஜ்கிரண் அருண்விஜய் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் விடாமுயற்சி படத்தை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி படமும் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இரண்டில் எந்த படம் வரும், அல்லது இரண்டு படமே அதே நாளில் வருமா, அல்லது இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியும் மாற்றப்படுமா என்பதில் ரசிகர்களுக்கு குழப்பம் நீடித்தது.

இந்த சூழ்நிலையில் தற்போது தெளிவான பதில் கிடைத்துள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 10ம் தேதி நடிகர் தனுஷ் நடித்து டைரக்ட் செய்திருக்கிற இட்லி கடை படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் ரிலீஸ் தேதியில் இந்த நிமிடம் வரை மாற்றம் இல்லை. ஆனால் அதே நேரத்தில் குட்பேட் அக்லி படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகிறது.

நடிகர் அஜீத்குமாரின் பிறந்த நாளான மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று குட்பேட் அக்லி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தை டிஜிட்டல் உரிமம் வாங்கியுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் அந்த தேதியை பரிந்துரை செய்த நிலையில், நடிகர் அஜீத்குமாரும் தனது பிறந்த நாளில் படத்தை வெளியிட ஓகே சொல்லி இருக்கிறார். அதனால் மே 1ம் தேதி குட் பேட் அக்லி படமும், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ படமும் ரிலீஸாவது உறுதியாகி உள்ளது.

சற்று முன்