விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற காமெடி ஷோவில் நடிகர்களை கலாய்த்து நகைச்சுவை செய்தவர் சந்தானம். அவரது நடிப்பை பார்த்து தனது படங்களில் காமெடி ரோலில் நடிக்க வைத்தவர் நடிகர் சிம்பு. மன்மதன் வல்லவன் ஒஸ்தி படங்களில் சந்தானம் காமெடி பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆனதால், பல படங்களில் காமெடி ரோலில் நடிக்கும் வாய்ப்பு சந்தானத்துக்கு கிடைத்தது.
ரஜினிகாந்த் விஜய் அஜீத்குமார் தனுஷ் ஜெயம் ரவி உதயநிதி ஸ்டாலின் என முன்னணி ஹீரோக்கள் படங்களில் காமெடி செய்த சந்தானம் ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறினார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஏஒன் சபாபதி வடக்குப்பட்டி ராமசாமி இங்க நான்தான் கிங்கு தில்லுக்கு துட்டு ஏஜண்ட் கண்ணாயிரம் தில்லுக்கு துட்டு என பல படங்களில் நடித்தார்.
அதே போல் காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறியவர் நடிகர் சூரி. வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் போட்டி காமெடி மூலம் ரசிகர்களை கவர்ந்த சூரி பல படங்களில் காமெடி ரோலில் நடித்து முன்னணி காமெடி நடிகராக மாறினார். குறிப்பாக சிவகார்த்திகேயன் சூரி காமெடி காம்போ பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆனது.
இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூரியை ஹீரோவாக மாற்றினார். விடுதலை படத்தில் கான்ஸ்டபிள் குமரேசன் என்ற கேரக்டரில் நடிக்க வைத்தார். அந்த படம் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் விடுதலை 2 கருடன் கொட்டுக்காளி படங்களில் சூரி நாயகனாக நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றார்.
இப்போது நடிகர் சூரி மாமன் என்ற படத்தில் நடித்து வருகிறார். விலங்கு வெப் சீரிஸ் இயக்கிய இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்துள்ளார். ராஜ்கிரண் சுவாசிகா உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற மே மாதம 16ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் நடிகர் சந்தானம் இப்போது நடித்து வரும் டிடி நெக்ஸ்ட் லெவல் படமும் வருகிற மே மாதம் 16ம் தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அதனால் வருகிற மே 16ம் தேதி சூரி நடித்த மாமன் படமும், சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படமும் ஒன்றாக ரிலீஸாகின்றன. காமெடி நடிகர்களான சந்தானம் சூரி, ஹீரோக்களாக முதன் முறையாக நேரடியாக வரும் மே 16ம் தேதி மோதுகின்றனர். இதில் களத்தில் வெல்லப் போவது யார் என, ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்திருக்கின்றனர்.





