தமிழ் சினிமாவில் போடா போடி என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இந்த படத்தில் ஹீரோவாக சிலம்பரசன், ஹீரோயினாக வரலட்சுமி சரத்குமார் மற்றும் டிவிடி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வரலட்சுமி சரத்குமாருக்கு இதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்து விஜய் சேதுபதி, நயன்தாரா, ராதிகா, ஆனந்தராஜ், ஆர்ஜே பாலாஜி உள்ளிட்டோர் நடித்த நானும் ரவுடிதான் என்ற படத்தை விக்னேஷ் சிவன் டைரக்ட் செய்தார். இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார். இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றது.
நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போதுதான் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் காதல் ஏற்பட்டது. 7 ஆண்டுகளுக்கு மேல் அவர்களது காதல் நீடித்த நிலையில் கடந்த 2023ம் ஆண்டில் அவர்கள் திருமணம் செய்துக்கொண்டனர். அவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை பிள்ளை பெற்றுக்கொண்டனர். உயிர், உலக் என்று பெயரிட்டு அந்த குழந்தைகளுக்கு பெற்றோராக வளர்த்து வருகின்றனர்.
இந்த சூழலில் தொடர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கினார். அந்த படத்துக்கு பிறகு 5 ஆண்டுகளுக்கு மேல் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே என்ற படத்தை இயக்கி வருகிறார். ஆறு மாதங்களுக்கு மேலாக ஷூட்டிங் நடந்து வருகிறது.
முதலில் இந்த படத்துக்கு எல்ஐசி என பெயர் வைக்கப்பட்டது. லைப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் என்ற ஆயுள் காப்பீட்டு கழகத்தின் சுருக்கம் எல்ஐசி என்பதால், அதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இந்த படத்துக்கு எல்ஐகே என பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதனால் லைக் என்று இந்த படத்தை ரசிகர்கள் அழைக்கின்றனர்.
லைக் படத்தில் ஒரு பாடல் காட்சி சிங்கப்பூரில் எடுக்கப்பட்டது. அந்த பாடலை மீண்டும் ரி ஷூட் செய்ய விக்னேஷ் சிவன் முடிவு செய்த நிலையில், மீண்டும் சிங்கப்பூரில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கவில்லை. அதனால் மலேசியாவில் அந்த பாடல் காட்சி மீண்டும் படமாக்கப்பட உள்ளது. வெற்றிமாறன் போல, விக்கியும் ரி ஷூட் செய்ய ஆரம்பித்துவிட்டாரா, என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.





