இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியாகி வணிக ரீதியாக 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்து பெரிய வெற்றியை பெற்ற படம் கல்கி 1898 ஏடி. இந்த படத்தில் பிரபாஸ் நாயகனாகவும் தீபிகா படுகோனே நாயகியாகவும் நடித்திருந்தனர். இந்த படத்தில் அமிதாப்பச்சன் கமல்ஹாசன் போன்றவர்களும் நடித்திருந்தனர்.
இப்போது கல்கி 2898 ஏடி படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. ஆனால் இந்த 2ம் பாகத்தில் நாயகியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கவில்லை. அவர் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதனால் தீபிகா படுகோனே கல்கி 2ம் பாகத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாகி விட்டது.
முதலில் பேசியதை விவ கூடுதலாக 25 சதவீதம் சம்பளம் கேட்டும், கால்ஷீட்டில் நேரம் குறைத்தல் என சிக்கலான நிபந்தனைகளை நடிகை தீபிகா படுகோனே சொன்னதால் அதிருப்தியடைந்த தயாரிப்பு நிறுவனம் அவரை நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் அந்த கேரக்டரில் நடிகை யாரென இன்னும் படக்குழு முடிவு செய்யவில்லை.
இதற்கிடையே பிரபாஸ் அனுஷ்கா ஷெட்டி ஜோடிக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 படங்களில் அவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்களிடம் செமையாக ஒர்க் அவுட் ஆனது. அதனால் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக அனுஷ்கா நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர்.
இந்த சூழலில் கல்கி 2898 ஏடி படத்தை தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடித்து வரும் படத்தில் இருந்தும் நடிகை தீபிகா படுகோனே நீக்கப்பட்டுள்ளார் என்ற ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. ஆனால் அது வதந்திதான். உண்மையில் அட்லி இயக்கி வரும் படத்தில் தீபிகா படுகோனே தொடர்ந்து நடித்துக்கொண்டு இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் மிகவும் சென்சிடிவ் நடிகை என பெயர் வாங்கியவர் நயன்தாரா. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் பயங்கர அட்ராசிட்டி செய்து இயக்குனர் தயாரிப்பாளரை டார்ச்சர் செய்து விடுவார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் அப்படிப்பட்ட நயன்தாராவையே ராஜா ராணி பிகில் ஜவான் போன்ற தனது படங்களில் நாயகியாக நடிக்க வைத்த அனுபவம் உள்ளவர் இயக்குனர் அட்லி. அதனால் தீபிகா படுகோனே போன்ற இம்சை அரசிகளை அவர் எளிதாக சமாளித்து விடுவார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.





