- Advertisement -
Homeபொழுதுபோக்குஎதுக்கும் சரியான பதிலை சொல்லப் போறது இல்லே, அப்புறம் எதுக்கு இவ்வளவு பில்டப்? ...

எதுக்கும் சரியான பதிலை சொல்லப் போறது இல்லே, அப்புறம் எதுக்கு இவ்வளவு பில்டப்? – முதல்வர் விஜயை கலாய்த்த பிரபலம்!

- Advertisement -

தவெக பிரசார பஸ்சில் டாப்பில் செட்டப் செய்திருக்கும் மேடையில் ஏறினால் மட்டுமல்ல, தமிழக சட்டசபையில் பேசினாலும் முதல்வர் விஜய் திமுகவை மட்டுமே விமர்சனம் செய்வார் என்பது அவர் கட்சி ஆரம்பித்தது முதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் பூசாரி என்பது போல விஜய்க்கு திமுகவை குறை சொல்வதை தவிர வேறு எதுவுமே தெரியாது என்பதே உண்மை.

தமிழக சட்டசபையில் திமுக எழுப்பிய கேள்விகளுக்கும் புகார்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் 3 நாட்கள் கழித்து திங்கட்கிழமை பதில் தருகிறேன் என்று கடந்த வியாழன் அன்று விஜய் அறிவித்தார். அப்போது நக்கலாக, யாரும் அப்போது வெளியே எழுந்து ஓடக்கூடாது என்றும் பேசிவிட்டு பிறகு அவரே வேகமாக வெளியேறி சென்றுவிட்டார்.

- Advertisement -

அப்போதே அவர் திமுகவை வசைபாடும் ஒரு பதிலுரையை தான் தரப் போகிறார் என்பது மக்களுக்கு தெளிவாக விளங்கி விட்டது. இன்று அதை மட்டுமே விஜய் செய்தார். தவெக வை பொருத்த வரை திமுகவை வசைபாடியே ஆட்சிக்கு வந்தார்கள். அவர்களை வசைபாடியே 5 ஆண்டுகளை ஓட்டப் போகிறார்கள். மற்றபடி ஓட்டுப் போட்ட மக்களுக்கு எந்த பயனும் இருக்காது என்பது தெளிவாகி வருகிறது.

இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன், தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, சுளீர், பளீர் எதிர்பார்ப்புகள் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு நின்று நிதானமாக பதில் தருவாரா? ப்ரெஸ்மீட் தராமல் இருப்பது ஏன்?

- Advertisement -

திமுகவிற்கு எதிரான ஃபைல்களை திறக்கப்போவது எப்போது? ஆதாரங்களை நீதிமன்றத்தில் தந்து தண்டனை வாங்கி தர முடியுமா? அதிமுக ஆட்சியில் நடந்த தவறுகளுக்கு ஏன் ஆதாரம் இல்லை? 10 ஆண்டுகள் அவர்கள் ஆண்டபோது சிறு தவறு கூட நடக்கவில்லையா?

தவெக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு எந்த அழகில் உள்ளது? கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் பற்றி நீங்கள் எப்போது பேசுவதாக உத்தேசம்? இன்று நடக்கப்போவது post interval mass scene போல ஏன் இவ்வளவு பில்டப்? என்று தனது பதிவில் ப்ளு சட்டை மாறன் கேள்வி எழுப்பி முதல்வர் விஜய் குறித்து விமர்சனம் செய்திருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்