- Advertisement -
Homeபொழுதுபோக்குஇசைக்கு உரிமை கொண்டாடிய இசையமைப்பாளருக்கு விழுந்த சம்மட்டி அடி… இனி அவரோட பாட்டே அவருக்கு சொந்தமில்லே…...

இசைக்கு உரிமை கொண்டாடிய இசையமைப்பாளருக்கு விழுந்த சம்மட்டி அடி… இனி அவரோட பாட்டே அவருக்கு சொந்தமில்லே… அதிரடி தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர்நீதிமன்றம்!

- Advertisement -

ஒரு பொருளை விற்று விட்டால் அதை விலை கொடுத்து வாங்கியவருக்கே சொந்தம். அதுதான் நியாயம். அதுதான் உலக வழக்கமாக இருந்து வருகிறது. ஒரு சினிமாவில் நடிக்க ஹீரோ ஹீரோயின் சம்பளம் வாங்குகின்றனர். அதே போல் இயக்குனர் ஒளிப்பதிவாளர், படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருமே வாங்கிய சம்பளத்துக்கு வேலை செய்து முடிக்கிறார்கள். தயாரிப்பாளர் தலையில்தான் எல்லா செலவும் விழுகிறது.

தயாரிப்பாளராக ஒரு படத்தின் இசை உட்பட அனைத்துக்கும் தயாரிப்பாளர்தான் செலவு செய்கிறார். சம்பளம் தருகிறார். ஆனால் இசையமைப்பாளர் இளையராஜா மட்டும் அவர் இசையமைத்த பாடல்களுக்கு அவர் மட்டுமே உரிமையானவர் என்கிறார். தன்னுடைய இசையை யாரும் பயன்படுத்த கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

அவர் தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு அந்த பாடல்களை படத்துக்கு இசையமைக்கும் நிலையில் இசை தனக்கு மட்டுமே சொந்தம் கொண்டாடுவது முரண்பட்ட செயல் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து இளையராஜா கோர்ட்டில் வழக்கு தொடர்கிறார். சம்பந்தப்பட்ட பட நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் நஷ்ட ஈடாக கேட்பதும் அடிக்கடி கோலிவுட்டில் நடந்து வருகிறது.

இசையமைப்பாளர் இளையராஜா அவர் இசையமைத்த பாடல்களை வேறு திரைப்படங்களில் பயன்படுத்தக் கூடாது. மற்ற ஆடியோ நிறுவனங்களும் அதை பயன்படுத்தக் கூடாது என்று தொடர்ந்து காப்புரிமை கோருகிறார். இந்நிலையில் கடந்த 1976ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை 25 ஆண்டுகள் இந்த காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் இசையும் மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்கே சொந்தம் என்று சரிகம நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது இளையராஜா தரப்பில், இந்த பாடல்களை தனது சொந்த பாடல்கள் என்று கூறி அமேசான் மியூசிக் ஐடியூன்ஸ் மற்றும் ஜியோ சாங்க் போன்ற டிஜிட்டல் ஸ்ட்ரீம் தளங்களில் பதிவேற்றியது சட்டவிரோதம் என்றும் கோர்ட்டில் வாதம் செய்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் நீதிபதி துஷார் ராவ் கெடேலா அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளார்.

அவர் அளித்த தீர்ப்பில், சரிகம நிறுவனத்தின் வாதத்தை ஏற்றுக்கொண்டு 134 படங்களின் பாடல்களை பயன்படுத்த இளையராஜாவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த தடையை விதிக்கவில்லை என்றால் சரிகம நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும் என்றும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார். இந்த அதிரடி தீர்ப்பு இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

சற்று முன்