- Advertisement -
Homeபொழுதுபோக்குயார் யாருக்கோ தேசிய விருது கொடுக்காறங்க… இந்தியாவிலேயே சிறந்த நடிகை அவங்களுக்கு ஏன் கொடுக்கலே? -...

யார் யாருக்கோ தேசிய விருது கொடுக்காறங்க… இந்தியாவிலேயே சிறந்த நடிகை அவங்களுக்கு ஏன் கொடுக்கலே? – நடிகர் சரத்குமார் ஆவேசம்!

- Advertisement -

நடிகர் சரத்குமார் கடந்த 1990களில் முன்னணி நட்சத்திர நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். சேரன் பாண்டியன் நாட்டாமை நட்புக்காக சூரிய வம்சம் சிம்மராசி போன்ற பல வெற்றிப் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தவர். நடிகை ராதிகாவை சரத்குமார் சூரியவம்சம் படத்தில் நடித்த பிறகு 2வது திருமணம் செய்துக்கொண்டார்.

ஆரம்பத்தில் சினிமா தயாரிப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் வந்த சரத்குமார், பிறகு நடிகர் விஜயகாந்த் விருப்பம் காரணமாக புலன் விசாரணை படத்தில் பாம்பே வில்லன் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். பிறகு கதாநாயகன் நடிகராக மாறிய நிலையில் இப்போது 70 வயதான நிலையில் கேரக்டர் ரோல்களில் சில படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

நடிகர் சரத்குமாரின் மனைவி ராதிகாவும் ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்தார். பிறகு அம்மா அக்கா அண்ணி கேரக்டர்களில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இப்போது முற்றிலும் மாறுபட்ட ஒரு தோற்றத்தில் தாய்கிழவி என்ற படத்தில் ராதிகா சரத்குமார் நடித்திருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்த படம் வருகிற 27ம் தேதி வெளியாக உள்ளது.

நடிகையாக மட்டுமின்றி டிவி சீரியல் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்ட ராதிகா, முதல் மரியாதை படத்தில் நடிகை ராதாவுக்கு பின்னணி குரல் பேசியவர் என்பது பலரும் அறியாத தகவலாகும். இப்போது பாஜக கட்சியிலும் அவர் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். கடந்த பார்லிமென்ட் தேர்தலில் விருதுநகரில் போட்டியிட்டு ராதிகா தோல்வியடைந்தார்.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சரத்குமார் கூறியதாவது, இந்தியாவிலேயே ஒரு சிறந்த நடிகை என்றால் அது ராதிகா தான். ஆனால் அவங்களுக்கு இன்னும் தேசிய விருது கொடுக்கலை. ஏன் என்று எனக்கு தெரியலே, யார் யாருக்கோ தேசிய விருது கொடுக்கிறார்கள். ஆனால் ராதிகாவுக்கு கொடுக்காதது எனக்கு வருத்தம் தான்.

எம்ஆர் ராதா எவ்வளவு பெரிய நடிகர். அவர் பெயரைக் காப்பாற்றியது ராதிகாவும் ராதா ரவியும் தான் என்று நடிகர் சரத்குமார் அந்த நேர்காணலில் மிகவும் ஆவேசமாக கூறியிருக்கிறார். தாய்கிழவி படத்தில் ராதிகாவின் நடிப்பு வேற லெவலில் இருப்பதால் நிச்சயமாக இந்த படத்துக்கு மத்திய மாநில அரசுகளின் விருதுகள் ராதிகாவுக்கு கிடைக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்