- Advertisement -
Homeபொழுதுபோக்குவிக்ரம் ரசிகர்களின் தலையில் இடியாய் இறங்கிய செய்தி... வீர தீர சூரன் பட ரிலீஸில் இப்படி...

விக்ரம் ரசிகர்களின் தலையில் இடியாய் இறங்கிய செய்தி… வீர தீர சூரன் பட ரிலீஸில் இப்படி ஒரு சிக்கலா… எதிர்பார்த்தபடி வெளியாகுமா?…

- Advertisement -

சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தங்கலான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பா ரஞ்சித் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதில் விக்ரமின் தோற்றமே மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் படத்தின் திரைக்கதை அந்த அளவு சுவாரசியமாக அமையாததால், ரசிகர்கள் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு கொடுக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து சித்தா பட இயக்குனர் அருண்குமார் உடன் கைகோர்த்தார் விக்ரம். தொடர்ந்து படப்பிடிப்பிற்குச் செல்ல வீர தீர சூரனாக இது வெளியாக இருக்கிறது. வழக்கமாக தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தை எடுத்தார்கள் என்றால் அதன் தொடர்ச்சியாக தான் இரண்டாம் பாகம் எடுக்கப்படும். இதைத்தான் பல ஆண்டுகளாக பின்பற்றி வருகிறார்கள்.

- Advertisement -

பில்லா திரைப்படம் வெளிவந்த பிறகு, அதன் முன் பகுதி ஆக பில்லா 2 எடுக்கப்பட்டிருந்தது. அதில் அஜித் எப்படி பில்லாவாக மாறினார் என்பதை காட்டியிருந்தார்கள். தற்போது இதற்கு ஒரு படி மேலே சென்று நேரடியாக இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார் அருண்குமார். ஆம் வீரதீர சூரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக தான் இது எடுக்கப்பட்டிருக்கிறது.

இது தமிழ் சினிமா மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. சொல்லப்போனால் இந்த ஒரு விஷயமே வீர தீர சூரன் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது. துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில், எஸ் ஜே சூர்யா, சூரஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படம் ஒரே நாள் இரவில் நடப்பது போன்று எடுக்கப்பட்டிருக்கும். அதேபோன்றுதான் இந்த திரைப்படத்தின் காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. படத்தை ஆரம்பக் காட்சியில் இருந்து பார்க்க வேண்டும் என்று ஏற்கனவே கூறியிருந்தார்கள். நாளை திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

படத்திற்கு முதலீடு செய்த B4U நிறுவனத்திற்கு, ஓடிடி உரிமத்திற்கான தொகை கொடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்ததாம். ஆனால் தற்போது வரை டிஜிட்டல் உரிமம் விற்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நஷ்ட ஈடு கேட்டு அந்த நிறுவனம், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாட, வீர தீர சூரன் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை காலை பத்தரை மணிக்கு மீண்டும் வழக்கு வரும் நிலையில், அதன் பிறகே படம் ரிலீஸ் ஆகுமா என்பது தெரியவரும்.

- Advertisement -

சற்று முன்