- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல ஹீரோ நடித்த படத்தின் 100வது நாள் விழா - மேடையில் அவருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு...

பிரபல ஹீரோ நடித்த படத்தின் 100வது நாள் விழா – மேடையில் அவருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பிச் சென்ற இயக்குநர்

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன், தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்று அழைக்கப்படுகிறார். கருணாநிதி அவருக்கு கலைஞானி என்ற பட்டம் வழங்கி, கவுரவித்தார். இப்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்துவரும் கமல், தேர்தல் நெருங்குவதால் அதற்கான பணிகளில் ஈடுபட்டார். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் தன்னை தயார் செய்து வருகிறார்.

கமல்ஹாசன் நடித்த படம் சட்டம் என் கையில் படம், கடந்த 1978ம் ஆண்டில் வெளிவந்தது. கமல்ஹாசனின் அதுவரை நடித்த படங்களில், 100 நாட்கள் ஓடிய முதல் படம். இந்த படத்தை தயாரித்து, இயக்கியவர் டி.என் பாலு. இவர் திமுகவை சேர்ந்தவர்.

- Advertisement -

அந்த காலகட்டத்தில், அதிமுக ஆட்சி நடந்த போது, எம்ஜிஆருக்கும் திமுக சார்ந்த டி.என் பாலுவுக்கும், கருத்து வேறுபாடுகளும் பிரச்னைகளும் இருந்திருக்கிறது. இதையடுத்து, டிஎன்பாலுவை கைது செய்ய எம்ஜிஆர் உத்தரவிட்டு இருக்கிறார்.

அப்போது, சென்னை உட்லன்ஸ் ஓட்டலில் நடந்த, சட்டம் என் கையில் படத்தின், 100வது நாள் விழா மேடையில் டி.என் பாலு இருக்கிறார். கமல் மீது அன்பு கொண்டவர் எம்ஜிஆர் என்பதால், அந்த பட விழா முடிந்த பின் கைது செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டு இருக்கிறார். அந்த விழாவில், திமுக தலைவரான கருணாநிதியும் இருந்திருக்கிறார். மேடையில் நன்றி சொல்லி பேச வந்த படத்தின் நாயகனாக கமல், இயக்குநர் டி என் பாலுவை காணாமல் தேடி இருக்கிறார்.

- Advertisement -

அப்போது மேடையில் இருந்த கருணாநிதி, சட்டம் என் கையில் படத்தை எடுத்த இயக்குநர் டிஎன் பாலு, இப்போது சட்டத்தை தன் கையில் எடுத்து விட்டார். தப்பித்து போய் விட்டார் என்று நகைச்சுவையாக கூறியிருக்கிறார். அவர் அங்கிருந்து தப்பித்துப் போக உதவியது, கார் கொண்டு வந்து அவரை கடத்திச் சென்றது கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன், அவர் திமுக தரப்பு வக்கீல் என்பதும் பின்னால் தெரிய வந்திருக்கிறது.

சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் இந்த விவரங்களை மேடையில் கூறிய கமல்ஹாசன், இப்படி என் அண்ணன் சாருஹாசனும், இயக்குநர் டிஎன் பாலுவும் செய்த பிரச்னைக்காக, நான் அப்போது பல இடங்களில் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது, என்றும் கூறினார்.

- Advertisement -

சற்று முன்