விஜய் நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் “லியோ” திரைப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் உட்பட பலரும் நடித்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் ஒரு அட்டகாசமான கேங்ஸ்டர் திரைப்படமாக இதனை உருவாக்கி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

“லியோ” திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளிவரவுள்ளது. பல முக்கியமான நடிகர்கள் இதில் நடித்து வருவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு “விக்ரம்” திரைப்படம் வேற லெவலில் ஹிட் ஆனது. இத்திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து “லியோ” திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்று தகவல் வெளிவந்தபோது ரசிகர்கள் பலரும் குஷியானார்கள்.
“லியோ” திரைப்படத்தை குறித்து பல தகவல்கள் அவ்வப்போது கசிந்துகொண்டேதான் இருக்கிறது. தற்போது சென்னை ஆதித்யா ராம் ஸ்டூடியோஸில் 2000 டான்சர்களை கொண்ட ஒரு பிரம்மாண்டமான பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக ஒரு தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது “லியோ” திரைப்படத்தை குறித்த ஒரு மாஸ் தகவல் வெளிவந்துள்ளது. இது உண்மையான தகவல்தான் என்று விக்கிபீடியா கூறுகிறது.

“லியோ” திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மிஷ்கின், சஞ்சய் தத் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது ஹாலிவுட் இயக்குனரான கிரிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் நடித்த ஒரு முக்கிய நடிகர் “லியோ” திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு கிரிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “டெனட்”. இத்திரைப்படத்தில் ஒரு இந்திய கதாப்பாத்திரத்தில் டென்சில் ஸ்மித் என்ற நடிகர் நடித்திருந்தார். இந்த டென்சில் ஸ்மித ஒரு பிரபல பாலிவுட் நடிகர் ஆகும். இந்த நிலையில் தற்போது டென்சில் ஸ்மித் “லியோ” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்று ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவலை விக்கிபீடியா உறுதி செய்கிறது. ஆனால் படக்குழுவிடம் இருந்து இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.





