- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிகாந்த் நடித்த கூலி படத்தை நான் பார்த்து விட்டேன்… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்ட...

ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தை நான் பார்த்து விட்டேன்… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்ட பதிவு வைரல்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இது ஒரு பான் இந்தியா படமாக நாளை வெளிவருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் மல்டிபில் ஸ்டார்ஸ் நடித்த படமாக கூலி நாளை வெளிவரும் நிலையில், இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.

இது நடிகர் ரஜினிகாந்துக்கு அவரது சினிமா பயணத்தில் 50வது ஆண்டு நிறைவு பொன்விழா ஆண்டாக உள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கடந்த 1975ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அபூர்வ ராகங்கள் படத்தில் நடிகராக அடியெடுத்து வந்த ரஜினிகாந்த், தற்போது 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

- Advertisement -

அவரது 50வது ஆண்டு பொன்விழாவில் கூலி படம் வெளியாகிறது. அவர் நடித்த முதல் படம் 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான நிலையில், அவரது 171வது படம் கூலி 2025ம் பொன்விழா ஆண்டில் நாளை ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது. அதனாலேயே இந்த படம் மாஸ் ஹிட் படமாக இந்திய ரசிகர்கள் கொண்டாடும் பிளாக்பஸ்டர் மூவியாக அமைய வேண்டும் என்பதே படக்குழுவினரின் ஆசையாக உள்ளது.

இந்நிலையில் கூலி படத்தை சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் குடும்பமாக பார்த்துள்ளனர். சன்டிவி அலுவலக வளாகத்தில் உள்ள கலாநிதி மாறனுக்கு சொந்தமான தியேட்டரில் இந்த படத்தை 2 குடும்பத்தினரும் பார்த்து திருப்தியடைந்திருக்கின்றனர்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் உதயநிதி ஸ்டாலின். ரெட் ஜெயின்ட் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர். ஆனால் இப்போது நடிப்பதில்லை. தமிழகத்தின் துணை முதல்வரா் உதயநிதி ஸ்டாலின், கூலி படம் குறித்து தனது வலைதள பக்கத்தில் பதிவை ஒன்றை செய்திருக்கிறார். அதில் 50 ஆண்டு பொன்விழா கொண்டாடும் நடிகர் ரஜினிக்கு வாழ்த்துகளை கூறியிருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி உள்ளது.

அந்த பதிவில் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது, கலை உலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் திரை உலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இந்த வரலாற்று தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன். நாளை வெளியாகும் கூலி படத்தை பார்க்கிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அனைத்து தரப்பையும் ஈர்க்கின்ற மாஸ் என்டர்டெய்னராக கூலி படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது, கூலி மாபெரும் வெற்றி பெற ரஜினிகாந்த் சார், சன் பிக்சர்ஸ், சத்யராஜ் சார் லோகேஷ் கனகராஜ் அமீர்கான் சார் சகோதரர் அனிருத் ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள் என்று அதில் உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்