- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன என்று தெரிஞ்சுக்கலாமா? - அட மலைக்கோட்டை...

இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன என்று தெரிஞ்சுக்கலாமா? – அட மலைக்கோட்டை வாலிபன் ரிலீஸ் இந்த ஓடிடி தளத்திலா?

- Advertisement -

முன்பெல்லாம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்கு என்றே படங்கள் தயாரிக்கப்பட்டன. இப்போதும் அப்படித்தான் தயாரிக்கப்படுகின்றன. அவை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட பின்னர், 4 வாரங்கள் கழித்து ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யப்படுகின்றன. இதனால் தியேட்டர்களில் கூட்டம் குறைந்து விட்டதாக, தியேட்டர் உரிமையாளர்கள் புலம்பி வருகின்றனர்.

இதே முறையில் பாலிவுட்டில் படங்கள் ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யப்படுகின்றன. ஆனால் படம் ரிலீஸ் ஆன 8 வாரங்களுக்கு பிறகுதான் ஓடிடி தளங்களில் அந்த படங்கள் ரிலீஸ் செய்யப்பட வேண்டும். அப்படி இல்லை என்றால், அந்த படங்களை மல்ட்டி பிளக்ஸ் தியேட்டர்களில் திரையிடுவது இல்லை என்ற ரூல்ஸ் அங்கு நடைமுறையில் உள்ளது.

- Advertisement -

இந்தியில் உள்ளதை போன்றே, தமிழிலும் தியேட்டரில் படம் ரிலீஸ் ஆனது முதல், 8 வாரங்களுக்கு பிறகுதான் ஓடிடியில் தமிழ் படங்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற தமிழ் சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை. ஏனெனில் 8 வாரங்கள் கால அவகாசம் என்றால், ஓடிடி தளங்கள் படங்களையே வாங்க முன்வர மாட்டார்கள்.

இந்நிலையில், ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யப்படுவதற்காகவே படங்கள் தனியாக எடுக்கப்பட்டு, நேரடியாக அந்த தளங்களில் ரிலீஸ் ஆகின்றன. அல்லது தியேட்டருக்கு வராத படங்களை, ஓடிடி தளங்களே நேரடியாக விலை கொடுத்து வாங்கியும் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்கின்றன. கொரோனா தொற்று பரவியிருந்த காலகட்டத்தில் அப்படிதான் பல தமிழ் படங்கள், ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யப்பட்டன.

- Advertisement -

இந்த வாரம் ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யப்படும் ஏழு படங்கள் குறித்த விவரங்கள் இப்போது வெளியாகி உள்ளது. அதன்படி போச்சர் என்ற வெப் சீரிஸ், நாளை அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது. அதார் த லாஸ்ட் ஏர்பண்டர் இன்று (22ம் தேதி) நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. அபார்ட்மென்ட் 404 என்ற படம், அமேசான் ப்ரைமில் நாளை வெளியாகிறது.

பவர்புக் 3, ரைசிங் கானன் லயன்ஸ்கேட் பிளேயில் நாளை ( 23ம் தேதி) வெளியாகிறது. அதே போல் சா எக்ஸ் படமும் லயன்ஸ்கேட் பிளேயில் நாளை வெளியாக உள்ளது. தி இந்திராணி முகர்ஜி ஜோடி என்ற இந்த வரலாற்று படம், நெட்பிளிக்ஸ் தளத்தில் நாளை வெளியாகிறது. மோகன்லால், சோனாலி குல்கர்னி நடித்த மலைக்கோட்டை வாலிபன் படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் நாளை வெளியாகிறது.

- Advertisement -

சற்று முன்