- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் கஷ்டப்பட்டு போட்ட பாட்டை எல்லாம், அவரோட பாட்டுன்னு நிறைய பேரு சொல்லிட்டு இருக்காங்க… -...

நான் கஷ்டப்பட்டு போட்ட பாட்டை எல்லாம், அவரோட பாட்டுன்னு நிறைய பேரு சொல்லிட்டு இருக்காங்க… – வேதனைப்பட்டு பேசிய பிரபல இசையமைப்பாளர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 49 ஆண்டுகளாக பல ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசை்யமைத்தவர் இசைஞானி இளையராஜா. எந்த வகையான பாடலாக இருந்தாலும், அதில் இளையராஜாவின் இசை ஆளுமை ரசிகர்களை தெறிக்க விடும். 83 வயதிலும், விடுதலை 2 படத்தில் அவர் எழுதிய பாடிய தெனம் தெனமும் உன் நெனப்பு பாடல், செம வைரலாகி வருகிறது.

இதே போல் தமிழ் சினிமாவில் பல இசையமைப்பாளர்கள் ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடல்களை, இசையை தந்து வருகின்றனர். அதில் குறிப்பிடத்தக்க ஒருவராக இருப்பவர் இசையமைப்பாளர் தேவா. தேனிசை தென்றல் தேவா என்றுதான் அவரை தமிழ் சினிமாவில் அழைக்கின்றனர். 1990களில் இவரது பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ரசிகர்களை கொண்டாட்டம் போட வைத்தன.

- Advertisement -

ராமராஜன் நடித்த மனசுக்கேத்த மகாராசா படம்தான் தேவா இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படம். ஆனால் 2வது படம் வைகாசி பொறந்தாச்சு தேவாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை தமிழ் சினிமாவில் பெற்றுத் தந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களால் பெரிய வரவேற்பை பெற்றது.

அதன்பிறகு அண்ணாமலை, சூரியன், தெற்கு தெரு மச்சான், கட்டபொம்மன், செந்தூரப்பாண்டி, என் ஆசை மச்சான், ஜல்லிக்காட்டு காளை, ஆசை, பாட்ஷா, சீதனம், அவ்வை சண்முகி, காந்தி பிறந்த மண், பொங்கலோ பொங்கல், காதல் கோட்டை, காலம் மாறிப் போச்சு, கல்லூரி வாசல், பாஞ்சாலங்குறிச்சி, எட்டுப்பட்டி ராசா, நேருக்கு நேர், ஒன்ஸ்மோர் என ஏராளமான படங்களுக்கு இசையமைத்தார்.

- Advertisement -

இதில் பெரும்பாலான படங்களில் தேவா இசை பெரிய அளவில் ஹிட் ஆனது. அவரது இசையில் வெளியான பாடல்களை ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அவருக்கு சினிமா வாய்ப்புகள் வெகுவாக குறைந்து போனதால் அதிகளவில் இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார். இதில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தேவா பேசியிருக்கிறார்.

இதுகுறித்து தேவா கூறியதாவது, ஒரு இசை நிகழ்ச்சிக்கு நான் அனுப்பிய பாட்டு லிஸ்ட் பார்த்துட்டு, எனக்கு போன் பண்ணினாங்க. தேவா சார் உங்க பாட்டு மட்டும் போதும், எதுக்கு வெளி மியூசிக் டைரக்டர் பாட்டு போட்டு இருக்கீங்க என்று கேட்டார்கள். அதுல எல்லாமே என் பாட்டுத்தானே என்று சொன்னேன். அதற்கு அவர், கொஞ்ச நாள் பொறு தலைவா பாட்டு உங்க பாட்டு இல்லையே, என்று சொன்னார். இல்லை சார் அது என் பாட்டுதான்னு சொன்னதுக்கு அதெல்லாம் உங்க பாட்டான்னு திருப்பி கேட்டார். அந்த பாட்டு எல்லாம் உருவாக்க எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும், ஆனா இப்ப தான் எல்லோருக்கும் அது என் பாட்டுன்னே தெரிய வருது என்று வருத்தப்பட்டு பேசியிருக்கிறார் தேனிசை தென்றல் தேவா.

- Advertisement -

சற்று முன்