- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதி 69 படத்தில் நடிக்க கமிட்டாகி பின் விலகிய பிரபல நடிகர், என்ன காரணம் என்று...

தளபதி 69 படத்தில் நடிக்க கமிட்டாகி பின் விலகிய பிரபல நடிகர், என்ன காரணம் என்று தெரியுமா? – அட சூப்பர் ஆக்டர் ஆச்சே அவர் என ரசிகர்கள் அதிருப்தி!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது தளபதி 69 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படமே தனது கடைசி படம் என்று அவர் ஏற்கனவே அறிவித்து விட்டார். இந்த படத்துக்கு பிறகு தனது முழு கவனத்தையும் தமிழக அரசியலில் செலுத்த இருக்கிறார். தனது கட்சி பணிகளில் தீவிரம் காட்ட முடிவு செய்திருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அரசியல் மாநாட்டை மிக வெற்றிக்கரமாக நடத்தி முடித்துள்ள நடிகர் விஜய், தளபதி 69 படப்பிடிப்பை வருகிற பிப்ரவரி மாத இறுதிக்குள் முடித்துவிடுமாறு இயக்குனர் எச் வினோத்திடம் வலியுறுத்தி உள்ளார். ஏனெனில் கட்சி பணிகளில் முழு ஆர்வத்துடன் அவர் இருக்கிறார்.

- Advertisement -

முதலில் ஷூட்டிங் 20 நாட்கள் அரசியல் பணி 10 நாட்கள் என திட்டமிட்ட நடிகர் விஜய், இரண்டிலும் மாறி மாறி கவனம் செலுத்தாமல் ஒரே வேலையாக படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு பிறகு கட்சி பணிகளை மட்டுமே கவனிக்கலாம் என்ற முடிவுக்கும் வந்திருக்கிறார். அதனால் பிப்ரவரிக்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளார்.

இது விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால் தளபதி 69 படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக தரவேண்டும் என்பதில் இயக்குனர் எச் வினோத் அதிக குறிக்கோளுடன் இருக்கிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரியாமணி, மமிதா பைஜூ, வரலட்சுமி சரத்குமார், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பாபி தியோல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

- Advertisement -

மேலும் இந்த படத்தில் கன்னடத்தில் உள்ள பிரபல நடிகர் சிவராஜ்குமார் நடிப்பதாக இருந்தது. இதற்காக அவரிடம் இயக்குனர் எச் வினோத் ஏற்கனவே பேசியிருக்கிறார். சிவராஜ்குமார் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், தளபதி 69 படத்தில் நான் நடிக்கிறேன், விஜய் ஒரு சிறந்த மனிதர் என்றும் கூறியிருந்தார்.

ஆனால் தற்போது தளபதி 69 படத்தில் சிவராஜ்குமார் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என்றும் தெரிகிறது. சம்பளம் அல்லது தனது கேரக்டர் அவர் திருப்தியாக இல்லாததால் விஜய் படத்தில் இருந்து அவர் விலகியதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஜெயிலர், கேப்டன் மில்லர் படங்களில் சிவராஜ்குமார் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்