- Advertisement -
Homeபொழுதுபோக்குயூத் படக்குழு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்த நடிகர் சிலம்பரசன் - அட...

யூத் படக்குழு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்த நடிகர் சிலம்பரசன் – அட இப்படி சொல்லியிருக்கிறாரே என ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

காமெடி நடிகர் கருணாஸ் மகன் கென் கருணாஸ் இப்போது நடிகராக இயக்குனராக யூத் படம் மூலம் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். ஏற்கனவே அசுரன் வாத்தி விடுதலை 2 உள்ளிட்ட படங்களில் நடித்த கென் கருணாஸ் யூத் படத்தின் வாயிலாக ஹீரோவாக டைரக்டராக களத்தில் குதித்துள்ளார்.

கடந்த 19ம் தேதி வெளியான யூத் படத்திற்கு நல்ல வரவேற்பும் ஆதரவும் ரசிகர்களிடம் கிடைத்துள்ள நிலையில், முதல் நாளில் 5 கோடி ரூபாய் 2வது நாளில் 6 கோடி ரூபாய் என தமிழ்நாட்டில் மட்டுமே இந்த படம் கணிசமான வசூலை குவித்துள்ளது. மேலும் தியேட்டர்களில் ஹவுஸ்புஃல் காட்சிகளாக படம் ஓடி வருகிறது.

- Advertisement -

யூத் படத்தில் கதாநாயகனாகவும் ஹீரோவாகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்த கென் கருனாஸ் மற்றும் கதாநாயகிகள் அனீஷ்மா மீனாட்சி பிரியான்ஷி யாதவ் ஆகியோருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனமும் ஆர்வமும் உருவாகி உள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான சின்ன பட்ஜெட் படங்களில் தாய்கிழவி படம் போல இதுவும் முக்கியமான ஒரு படமாக இப்போது ரசிகர்களிடம் பாராட்டை பெற்றுள்ளது.

இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, யூத் புதுமையுடன் கூடிய மனம் நிறைந்த திரைப்படம். என்ன ஒரு அனுபவம்… இந்தக் கதை இன்றைய தலைமுறையினருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். அருமையான நடிப்பு கென்.

- Advertisement -

இந்த இளம் வயதிலேயே நடிப்பிலும் இயக்கத்திலும் கவனிக்க வைத்தது உண்மையிலேயே ஆச்சரியப்படுத்துகிறது. இதற்கான முழு தகுதியும் உங்களுக்கு உண்டு தம்பி. அனிஷ்மா மீனாட்சி பிரியான்ஷி யாதவ் ஆகியோர் இந்த படத்துக்கு அபாரமான பலத்தை கொடுத்திருக்கின்றனர். ஜீவி பிரகாஷின் இசை ஒவ்வொரு தருணங்களையும் அழகாக மேம்படுத்தி காட்டுகிறது.

மொத்த படக் குழுவினருக்கும் வாழ்த்துகள். இதனை தவற விடாதீர்கள் என்று தனது எக்ஸ் பதிவில் நடிகர் சிம்பு யூத் படக்குழுவினரை மனதார பாராட்டி வாழ்த்தி இருக்கிறார். யூத் படத்தில் நடிகர் சிலம்பரசனின் ரசிகராக கென் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் சிம்புவை படக்குழுவினர் நேரில் சந்திக்கவும் அப்பாயின்ட்மென்ட் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்